/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
செட்டிப்பட்டில் தைப்பூசபால் காவடி
/
செட்டிப்பட்டில் தைப்பூசபால் காவடி
ADDED : ஜன 19, 2024 10:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார், -செட்டிப்பட்டு முருகன் கோவிலில் தைப்பூச பால் காவடி விழா வரும் 25ம் தேதி நடக்கிறது.
திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தில் வள்ளி தேவசேனா சமேத முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 52ம் ஆண்டு தைப்பூச பால் காவடி விழா வரும் 25ம் தேதி நடக்கிறது.
அன்று காலை 7:00 மணிக்கு சங்கராபரணி ஆற்றங்கரைக்கு சென்று கரகம் ஜோடித்து, சுவாமிக்கு பால்காவடி எடுத்து வந்து பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து, மஞ்சள் இடித்தல், மிளகாய் பொடி அபிஷேகம், அக்கினி சட்டி எடுத்தல், ஆகாய மாலை அணிவித்து செடல் உற்சவம் நடக்கிறது. காலை 9:30 மணிக்கு பக்தர்கள் டயர் வண்டி இழுப்பது, வேல் அணிந்து வருவது, தேர் இழுப்பது நடக்கிறது.