/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கொம்பாக்கம் பகுதியில் தார் சாலை சிவா எம்.எல்.ஏ., பூமி பூஜை.
/
கொம்பாக்கம் பகுதியில் தார் சாலை சிவா எம்.எல்.ஏ., பூமி பூஜை.
கொம்பாக்கம் பகுதியில் தார் சாலை சிவா எம்.எல்.ஏ., பூமி பூஜை.
கொம்பாக்கம் பகுதியில் தார் சாலை சிவா எம்.எல்.ஏ., பூமி பூஜை.
ADDED : மார் 12, 2024 05:27 AM

வில்லியனுார் : கொம்பாக்கம் பகுதியில் பல்வேறு பணிகளுக்கு சிவா. எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து பணிகளை துவக்கிவைத்தார்.
வில்லியனுார் தொகுதி கொம்பாக்கம் அய்யனார் கோவில் முதல் செட்டிக்களம் ரோடு வரையில் ரூ. 1:40 கோடி செலவில் புதிய தார்ச் சாலை, கொம்பாக்கம் கோதண்டபாணி நகர், யோகவா நகர், ஈஸ்வர் நகர், செட்டிக்களம் துர்கா நகர், பாப்பாஞ்சாவடி சப்தகிரி கார்டன் உள்ளிட்ட பகுதியில் ரூ. 42:30 லட்சம் திட்ட மதிப்பில் தார்ச் சாலை அமைக்கப்படவுள்ளது.
மேலும் ஒட்டாம்பாளையம் கர்மவீரர் காமராஜர் குடியிருப்பு பகுதியில் ரூ. 14:00 லட்சம் செலவில் ஆழ்துளை கிணறு அமைக்க சிவா எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து பணிகளை துவக்கிவைத்தார். மேலும் மின்துறை சார்பில் ரூ. 23:00 லட்சம் செலவில் செட்டிக்குளம் மற்றும் கொம்பாக்கம் பிள்ளையார் கோவில் தெரு ஆகிய இரு இடங்களில் டிரான்ஸ்பார்ம்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இயக்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி, செயற்பொறியாளர் சிவபாலன், உதவிப் பொறியாளர் வெங்கடாஜலபதி, இளநிலைப் பொறியாளர் ஞானசேகரன், பொதுப்பணித்துறை மத்திய கோட்ட செயற்பொறியாளர் திருஞானம், இளநிலைப் பொறியாளர் முருகேசன், மின்துறை உதவிப் பொறியாளர் செல்வபாண்டி, பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைப் பிரிவு செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன், உதவிப் பொறியாளர் மோகன்ராஜ் மற்றும் ஊர் முக்கியதஸ்ர்கள், தி.மு.க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

