/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
துாய இருதய ஆண்டவர் பசிலிக்காவில் 118ம் ஆண்டு பெருவிழா துவக்கம்
/
துாய இருதய ஆண்டவர் பசிலிக்காவில் 118ம் ஆண்டு பெருவிழா துவக்கம்
துாய இருதய ஆண்டவர் பசிலிக்காவில் 118ம் ஆண்டு பெருவிழா துவக்கம்
துாய இருதய ஆண்டவர் பசிலிக்காவில் 118ம் ஆண்டு பெருவிழா துவக்கம்
ADDED : ஜூன் 21, 2025 12:38 AM

புதுச்சேரி: புதுச்சேரி துாய இருதய ஆண்டவர் பசிலிக்காவின் 118ம் ஆண்டு பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதையொட்டி, காலை சிறப்பு திருப்பலி நடந்தது. சுல்தான்பேட் மறை மாவட்ட பீட்டர் அபீர், புதுச்சேரி - கடலுார் உயர் மறைமாவட்ட முதன்மை குரு குழந்தைசாமி, பங்கு தந்தை பிச்சைமுத்து, உதவி பங்கு தந்தை வின்சென்ட் சின்னதுரை ஆகியோர் கொடியேற்று விழாவை துவக்கி வைத்தனர்.
ஆண்டு பெருவிழா கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, கொடி மரம் அருகே சிறப்பு பிரார்த்தனை நடந்தது. ஆலய கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. ஏராளமான கிறிஸ்துவர்கள் பங்கேற்றனர்.
நாளை 22ம் தேதி ஏசுவின் திருவுடல் திருரத்த பெருவிழா நடக்கிறது. காலை 7:30 மணிக்கு புதுச்சேரி - கடலுார் உயர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட், மதியம் 12:00 மணிக்கு மூகையூர் பங்குத் தந்தை அற்புதராஜ், மாலை 6:15 மணிக்கு குருசுக்குப்பம் பங்குத்தந்தை சின்னப்பன் ஆகியோர் திருப்பலியை நிறைவேற்றுகின்றனர்.
27ம் தேதி ஏசுவின் இருதய பெருவிழாவையொட்டி, மதியம் 12:00 மணிக்கு திருப்பலியில் துாத்துக்குடி, முன்னாள் ஆயர் யுவான் அம்புரோஸ் பங்கேற்கிறார். ஆடம்பர பெருவிழா 29ம் தேதி நடக்கிறது.
காலை 7:30 மணி திருப்பலியில் ஹைதராபாத் உயர் மறை மாநில பேராயர் அந்தோணி பூலா, மாலை 5:30 மணி திருப்பலியில் சென்னை, மயிலை உயர் மறைமாவட்டபேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி ஆகியோர் பங்கேற்கின்றனர். தொடர்ந்து, ஆடம்பர தேர்பவனிநடக்கிறது.