பி.எஸ்சி., நர்சிங் படிப்பிற்கு 5ம் தேதி நுழைவு தேர்வு ஹால்டி க்கெட் இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்
பி.எஸ்சி., நர்சிங் படிப்பிற்கு 5ம் தேதி நுழைவு தேர்வு ஹால்டி க்கெட் இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்
ADDED : ஜூலை 01, 2026 02:40 AM

புதுச்சேரி: பி.எஸ்சி., நர்சிங் படிப்பிற்கான நுழைவுத் தேர்வு வரும் 5ம் தேதி நடக்கிறது. இதற்கான ஹால் டிக்கெட் இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
புதுச்சேரியில் 2 அரசு செவிலியர் கல்லுாரிகள் உட்பட மொத்தம் 13 நர்சிங் கல்லுாரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் பி.எஸ்சி., நர்சிங் படிப்பில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு சுகாதாரத்துறை மூலம் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு, சென்டாக் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
இந்த 2026--27ம் கல்வி ஆண்டு உள்ள 558 அரசு இட ஒதுக்கீட்டு இடங்களுக்கு, புதுச்சேரியை சேர்ந்த 1,660 பேர் உட்பட மாநிலம் முழுவதும் 2,312 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு இன்று முதல் ஹால்டிக்கெட்டை சென்டாக் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை இணை இயக்குநரும், நோடல் அதிகாரியுமான (தேர்வு பிரிவு) மேரி ஜோஸ்பின் சித்ரா விடுத்துள்ள செய்திக்குறிப்பு;
இந்திய நர்சிங் கவுன்சில் செயலரின் உத்தரவுபடி, புதுச்சேரி சுகாதாரம் மற்றும் குடும்ப நல சேவை இயக்குநரகத்தின் கீழ் இயங்கும் செவிலியர் தேர்வுகள் வாரியம் மூலம், பி.எஸ்சி., (நர்சிங்) படிப்புக்கு சென்டாக் அரசு ஒதுக்கீட்டு சேர்க்கைக்கான பொது நுழைவு தேர்வை நடத்த முன்மொழிந்துள்ளது. இந்த பொது நுழைவுத் தேர்வு வரும் 5ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடக்கிறது.
மாணவர்கள் தங்களது ஹால்டிக்கெட்டை இன்று (1ம் தேதி) காலை 10 மணி முதல் சென்டாக் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
