sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஏப்ரல் 27, 2026 ,சித்திரை 14, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 பராமரிப்பு இன்றி கிடக்கும் மூலக்குளம்

/

 பராமரிப்பு இன்றி கிடக்கும் மூலக்குளம்

 பராமரிப்பு இன்றி கிடக்கும் மூலக்குளம்

 பராமரிப்பு இன்றி கிடக்கும் மூலக்குளம்

1


ADDED : ஏப் 26, 2026 08:51 PM

Google News

ADDED : ஏப் 26, 2026 08:51 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியின் முக்கிய நீர்நிலைகளில் ஒன்றான மூலக்குளம், போதிய பராமரிப்பின்றி உள்ளது.

புதுச்சேரியில் இருந்து வில்லியனுார் செல்லும் சாலையில் உள்ள ஒரு பகுதிக்கு மூலக்குளம் என்று பெயர் வரக் காரணமாக இருந்த இந்தக் குளம், இன்று தனது அடையாளத்தை இழந்து வருகிறது. ஒரு காலத்தில் இப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த உறுதுணையாக இருந்த குளம் தற்போது புதர்கள் மண்டி காடு போல் காட்சியளிக்கிறது.

குளத்தைச் சுற்றியும் குப்பைகள் கொட்டப்படுவதால், நீர்நிலை குப்பை கிடங்காக மாறி வருகிறது. குளத்திற்கு தண்ணீர் வரும் அனைத்து வழிகளும் ஆக்கிரமிப்புகளால் அடைக்கப்பட்டுள்ளன. போதிய தண்ணீர் இல்லாததால், குளத்தின் உட்பகுதி புதர் மண்டி கிடப்பதோடு, ஒரு பகுதி சிறுவர்களின் விளையாட்டு மைதானமாகவும் மாறிவிட்டது.

தற்போது புதிய குளங்களை வெட்டுவது சவாலான காரியமாக உள்ள நிலையில், இருக்கும் நீர்நிலைகளையாவது பாதுகாக்க வேண்டும். பெயருக்கு மட்டுமே மூலக்குளம் என்று இல்லாமல், அதனைத் துார்வாரி, கரைகளைப் பலப்படுத்தி, மீண்டும் நீர்நிலையாக மாற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us