/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கடலுார் சாலையில் பாலம் உள் வாங்கியது முதல்வர் பார்வையிட்டு ஆலோசனை
/
கடலுார் சாலையில் பாலம் உள் வாங்கியது முதல்வர் பார்வையிட்டு ஆலோசனை
கடலுார் சாலையில் பாலம் உள் வாங்கியது முதல்வர் பார்வையிட்டு ஆலோசனை
கடலுார் சாலையில் பாலம் உள் வாங்கியது முதல்வர் பார்வையிட்டு ஆலோசனை
ADDED : டிச 05, 2024 07:01 AM

அரியாங்குப்பம்: கடலுார் சாலையில் ஆற்று பாலம் உள் வாங்கியதை, முதல்வர் ரங்கசாமி பார்வையிட்டு, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரி - கடலுார் சாலை அரியாங்குப்பம் அடுத்த இடையார்பாளையம் அருகே உள்ள ஆற்று பாலம் நேற்று இரவு 10:00 மணிக்கு உள் வாங்கியது. அதனை அடுத்து, கடலுாருக்கு சென்ற அனைத்து வானங்களையும், போலீசார் முருங்கப்பாக்கம் சந்திப்பு, கொம்பாக்கம் வழியாக திருப்பி விட்டனர்.
தகவலறிந்த, முதல்வர் ரங்கசாமி, கலெக்டர் குலோத்துங்கன், சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன், பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பாலம் உள் வாங்கியது பற்றி, அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.
பாலம் எப்படி உள்வாங்கியது
புதுச்சேரி - கடலுார் சாலையில் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில், கட்டப்பட்ட பாலம், சேதமடைந்தது. அதனை அடுத்து, அதன் அருகே புதிய பாலம் கட்டப்பட்டு, கடந்த 1992ல் திறக்கப்பட்டது.
கடந்த 1ம் தேதி வீடூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. கரைபுரண்டு ஓடிய வெள்ளம் சங்கராபரணி ஆறு, நோணாங்குப்பம் ஆற்றில் கடந்த 2ம் தேதி பெருக்கெடுத்தது.
அப்போது, இடையார்பாளையம் என்.ஆர்.நகர், அருகே ஆற்றின் கரை உடைப்பு ஏற்பட்டு, உபரி தண்ணீர், இடையார்பாளையம் ஆற்று பாலத்தின் வழியாக ஓடியது.
அதிக வேகத்தில் சென்ற வெள்ளத்தால் பாலத்தின் அடியில் மண் அரிப்பு ஏற்பட்டு, பாலம் உள் வாங்கியது.
பாலத்தின் அருகே உள்ள தனியார் படகு குழாம் ஆற்று தண்ணீர் சுலபமாக செல்ல முடியாமல் தடுத்ததால், பாலத்தில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
பாலம் உள் வாங்கியதை சீர் செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.