/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேரோட்டத்தில் நிலை தடுமாறிய முதல்வர்
/
தேரோட்டத்தில் நிலை தடுமாறிய முதல்வர்
ADDED : ஜூன் 09, 2025 04:48 AM
வில்லியனுார் : வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவில் தேரோட்டத்தை கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் தேரை வடம் பிடித்து துவக்கி வைத்தனர். முன்னதாக, முதல்வர் ரங்கசாமி தேரை வடம் பிடித்து துவக்கி வைக்க அவசர அவசரமாக வந்தபோது, அவர் தேர் அருகில் நிற்க போதிய இடம் இல்லை. இதனை அமைச்சர் நமச்சிவாயம் சுட்டிக்காட்டினார்.
இதையடுத்து, அமைச்சர் தேனீ ஜெயக்குமார், முதல்வர் ரங்கசாமிக்கு இடம் ஒதுக்கி வழிவிட்டார். அப்போது, பின்னால் நின்றிருந்த பாதுகாப்பு அதிகாரியை கூட்டத்தினர் வேகமாக தள்ளியதால், அவர் முதல்வர் முதுகு பகுதி மீது மோதினார்.
இதனால், முதல்வர் ரங்கசாமி சற்று நிலை தடுமாறினார். இருப்பினும் சுதாகரித்துக் கொண்டு நின்றார். இதனால், அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.