/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இருளஞ்சந்தை இருளர் மக்களிடம் குறைகளை கேட்டறிந்த கலெக்டர்
/
இருளஞ்சந்தை இருளர் மக்களிடம் குறைகளை கேட்டறிந்த கலெக்டர்
இருளஞ்சந்தை இருளர் மக்களிடம் குறைகளை கேட்டறிந்த கலெக்டர்
இருளஞ்சந்தை இருளர் மக்களிடம் குறைகளை கேட்டறிந்த கலெக்டர்
ADDED : பிப் 16, 2025 05:28 AM

பாகூர்: இருளஞ்சந்தை கிராமத்தில் வசித்து வரும் இருளர் மக்களை சந்தித்து, கலெக்டர் குலோத்துங்கன் குறைகளை கேட்டறிந்தார்.
பாகூர் தொகுதி, இருளஞ்சந்தை புறாந்தொட்டி கரை பகுதியில் வசித்து வரும் இருளர் குடும்பங்கள், தங்களுக்கு இலவச மனைபட்டா வழங்கி, வீடுகள் கட்டித்தர கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, இருளஞ்சந்தை கிராமத்தில் ஒரு இடம் தேர்வு செய்யப்பட்டு, கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பூர்வீக பழங்குடி இருளர் நல சங்க மாநில தலைவர் செல்வராஜ், பொதுச் செயலாளர் அரங்கநாதன் ஆகியோர் தலைமையில், இருளஞ்சந்தை இருளர் மக்கள் கலெக்டர் குலோத்துங்கனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
இதையடுத்து, கலெக்டர் குலோத்துங்கன் நேற்று பல்வேறு அரசு துறை அதிகாரிகளுடன் இருளஞ்சந்தை இருளர் குடியிருப்புக்கு சென்று மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
அப்பகுதி மக்கள், எங்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்கி, கல் வீடுகளை அரசு கட்டித்தர வேண்டும். இங்குள்ள மக்கள் பலருக்கு ஓய்வு ஊதியம், மகளிர் உரிமை தொகை போன்ற அரசு நலத் திட்டங்கள் கிடைக்கவில்லை' என்றனர்.
பின், சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளை அழைத்து, பிரச்னைகள் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
சப் கலெக்டர் அங்கீத்குமார், நில அளவை பதிவேடுகள் துறை இயக்குனர் செந்தில்குமார், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் இளங்கோவன், தாசில்தார் கோபாலக்கிருஷ்ணன், பாகூர் அரசு மருத்துவர் ஆனந்தவேல் உட்பட பலர் உடனிருந்தனர்.

