/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மத்திய அமைச்சர் அடிக்கல் நாட்டிய உயர்மட்ட பாலம் கட்டுவது எப்போது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக பணி துவங்குமா என எதிர்பார்ப்பு
/
மத்திய அமைச்சர் அடிக்கல் நாட்டிய உயர்மட்ட பாலம் கட்டுவது எப்போது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக பணி துவங்குமா என எதிர்பார்ப்பு
மத்திய அமைச்சர் அடிக்கல் நாட்டிய உயர்மட்ட பாலம் கட்டுவது எப்போது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக பணி துவங்குமா என எதிர்பார்ப்பு
மத்திய அமைச்சர் அடிக்கல் நாட்டிய உயர்மட்ட பாலம் கட்டுவது எப்போது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக பணி துவங்குமா என எதிர்பார்ப்பு
UPDATED : பிப் 11, 2026 07:58 AM
ADDED : பிப் 11, 2026 04:19 AM

சுற்றுலா நகரமான புதுச்சேரியில், போக்குவரத்து பிரச்னைகளும் நாளுக்கு நாள் பூதாகரமாகி வருகிறது. குறுகிய சாலைகள், போக்குவரத்து நெரிசலால் உள்ளூர் மக்கள் மட்டுமன்றி சுற்றுலா பயணிகளும் கடும் சிரமப்படுகின்றனர்.
குறிப்பாக ஒரு கி.மீ., துாரமே உள்ள இந்திரா சிக்னல் முதல் ராஜிவ் சிக்னலை கடக்க போதும், போதும் என்றாகிவிடுகிறது. இதனை தவிர்க்க, புதுச்சேரி வழியாக தமிழக பகுதிக்கு செல்லும் வாகனங்கள் புதுச்சேரி நகருக்குள் வாராமல் நேரடியாக செல்லும் வகையில் இந்திரா - ராஜிவ் சதுக்கங்களிடையே உயர்மட்ட மேம்பாலம் கட்ட வேண்டும் என பல்வேறு அமைப்புகள் அரசை வலியுறுத்தி வந்தன.
முதல்வர் அறிவிப்பு அதனையேற்று, முதல்வர் ரங்கசாமி நகர போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இந்திரா - ராஜிவ் சதுக்கங்களிடையே உயர்மட்ட மேம்பாலம் கட்டப்படும் என, சட்டசபையில் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, இந்த உயர்மட்ட பாலத்தை கட்ட மத்திய அரசின் உதவியை நாடியது.
புதுச்சேரி அரசின் கோரிக்கையை ஏற்று, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் சார்பில், ரூ.436 கோடி செலவில், இந்திரா - ராஜிவ் சதுக்கங்கள் இடையே 3.877 கி.மீ., நீளத்துக்கு உயர்மட்ட பாலம் கட்ட ஒப்புதல் வழங்கியது.
அடிக்கல் நாட்டல் அதனைத் தொடர்ந்து இந்த உயர்மட்ட மேம்பால பணியை, கடந்த அக்டோபர் 13ம் தேதி மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், இந்த உயர்மட்ட மேம்பாலத்தை மத்திய சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகம் (மோர்த்) மூலம் கட்டப்படும். இப்பணி டிசம்பர் மாதம் துவங்கப்படும் என்றார். அமைச்சரின் அறிவிப்பை கேட்ட மக்கள், புதுச்சேரி நகருக்கு விடிவுகாலம் பிறந்ததாக மகிழ்ச்சி அடைந்தனர்.
அச்சம் ஆனால், அமைச்சர் சொன்ன டிசம்பர் மாதமும் போயி, ஜனவரி மாதமும் முடிந்துவிட்டது. உயர்மட்ட மேம்பாலம் கட்டுமான பணி துவங்குவதற்கான எந்த முகாந்திரமும் தென்படவில்லை. இந்நிலையில் ஓரிரு வாரங்களில் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், எந்த பணிகளையும் துவங்க முடியாது.
எதிர்க்கட்சிக்கு அவல் ஆளும் அரசு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி, தேர்தலை சந்திக்க தயாராகி உள்ளது. அதிலும், முத்தாய்ப்பாக ஒட்டுமொத்த புதுச்சேரி நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண அடிக்கல் நாட்டப்பட்ட உயர்மட்ட மேம்பால பணி அறிவித்தபடி துவங்காவிட்டால், இதனையே எதிர்க்கட்சிகள், ஆளும் கட்சிக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ள வாய்ப்பாகி விடும் நிலை உள்ளது.
ஓரிரு நாளில் பணியாணை இதுகுறித்து, அமைச்சர் லட்சுமி நாராயணனிடம் கேட்டபோது, உயர்மட்ட மேம்பாலம் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் நேரடியாக கட்டப்பட உள்ளது.
இதற்கான டெண்டர் உறுதி செய்யப்பட்டுவிட்டது.
ஓரிரு நாளில், பணி ஆணை வழங்கப்பட்டு, பணிகள் துவங்கப்படும் என்றார்.

