/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இருண்டு கிடக்கும் லாஸ்பேட்டை கல்வி சதுக்கம் கடும் அதிருப்தியில் பொதுமக்கள், மாணவர்கள் கவர்னர், முதல்வர் கவனத்திற்கு...
/
இருண்டு கிடக்கும் லாஸ்பேட்டை கல்வி சதுக்கம் கடும் அதிருப்தியில் பொதுமக்கள், மாணவர்கள் கவர்னர், முதல்வர் கவனத்திற்கு...
இருண்டு கிடக்கும் லாஸ்பேட்டை கல்வி சதுக்கம் கடும் அதிருப்தியில் பொதுமக்கள், மாணவர்கள் கவர்னர், முதல்வர் கவனத்திற்கு...
இருண்டு கிடக்கும் லாஸ்பேட்டை கல்வி சதுக்கம் கடும் அதிருப்தியில் பொதுமக்கள், மாணவர்கள் கவர்னர், முதல்வர் கவனத்திற்கு...
ADDED : நவ 25, 2025 05:30 AM
புதுச்சேரி: லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலை கல்வி சதுக்க சந்திப்பு, ெஹலிபேடு மைதானம் இருளில் மூழ்கி கிடப்பது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் போக்குவரத்து மிகுந்த சாலைகளில் ஒன்றாக லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலை உள்ளது. இச்சாலை வழியாக இரவிலும், பகலிலும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலை கல்வி சதுக்க சந்திப்பு, பல மாதமாக இருளில் மூழ்கி கிடப்பதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், மாலை நேரங்களில் இச்சாலையில் 'வாக்கிங்' செல்வோர் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
வெளிச்சம் இல்லாததால் பெண்களுக்கு இந்த சந்திப்பில் பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. திருட்டு, வழிப்பறி சம்பவங்களும் நடக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஏர்போர்ட் சாலை கல்வி சதுக்கத்தினை சுற்றிலும்,ஏராளமான கல்வி நிறுவனங்கள் உள்ளன. இங்கு படிக்கும் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் இந்த சந்திப்பில் வந்துதான் பஸ் ஏறுகின்றனர். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய இடமே இப்போது அச்சமூட்டும் இருளின் பிடியில் சிக்கி கிடக்கிறது.
இதுமட்டுமின்றி, ஏர்போர்ட், ஹெலிபேடு மைதானம், ஸ்கேட்டிங் மைதானம், உள்விளையாட்டு அரங்கம், தீயணைப்பு கோட்ட அதிகாரி அலுவலகம், நீதிபதி குடியிருப்பிற்கு என பலரும் இந்த சந்திப்பினை கடந்துதான் செல்கின்றனர்.
அப்படி இருந்தும் கூட முக்கியத்துவம் வாய்ந்த இச்சந்திப்பு இருளில் மூழ்கி கிடப்பது பொதுமக்களிடமும், மாணவர்களிடமும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல் ெஹலிபேடு மைதானத்திலும் ஒரு ைஹமாஸ் விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சங்கமிக்கும் கல்வி சதுக்க சந்திப்பு, ெஹலிபேடு மைதானத்தில் இருளில் மூழ்கி கிடப்பதை வேடிக்கை பார்ப்பதா.... மக்களின் உயிருக்கு மதிப்பில்லையா.. என்ன தான் செய்கின்றனர் அதிகாரிகள்... இருளை பார்த்துக்கொண்டு அரசும் வேடிக்கை பார்ப்பதா என்று மக்கள் கேள்வி எழுப்பியப்படி கொந்தளிக்கின்றனர்.
இப்பகுதிகளில் உடனடியாக ைஹமாஸ் விளக்கினை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க பொதுப்பணித் துறைக்கு கவர்னர், முதல்வர் உத்தரவிட வேண்டும்.

