/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சொசியெத்தே புரோகிரேசீஸ்த் பள்ளியை அரசே நடத்தலாம்; கல்வி அமைச்சருக்கு லட்சுமிநாராயணன் ஆலோசனை 'தினமலர்' நாளிதழை சுட்டிக்காட்டி கடிதம்
/
சொசியெத்தே புரோகிரேசீஸ்த் பள்ளியை அரசே நடத்தலாம்; கல்வி அமைச்சருக்கு லட்சுமிநாராயணன் ஆலோசனை 'தினமலர்' நாளிதழை சுட்டிக்காட்டி கடிதம்
சொசியெத்தே புரோகிரேசீஸ்த் பள்ளியை அரசே நடத்தலாம்; கல்வி அமைச்சருக்கு லட்சுமிநாராயணன் ஆலோசனை 'தினமலர்' நாளிதழை சுட்டிக்காட்டி கடிதம்
சொசியெத்தே புரோகிரேசீஸ்த் பள்ளியை அரசே நடத்தலாம்; கல்வி அமைச்சருக்கு லட்சுமிநாராயணன் ஆலோசனை 'தினமலர்' நாளிதழை சுட்டிக்காட்டி கடிதம்
ADDED : அக் 13, 2025 12:45 AM
புதுச்சேரி; பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் பிரெஞ்சு உணவகத்திற்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளசொசியெத்தே புரோகிரேசீஸ்த்பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டி, 'தினமலர்' நாளிதழ் செய்தியை சுட்டிக் காட்டி, கல்வித்துறை அமைச்சருக்கு, பொதுப்பணித்துறை அமைச்சர் கடிதம் அனுப்பியுள்ளார்.
புதுச்சேரி, ராஜ்பவன் தொகுதி செட்டி கோவில் தெருவில் இயங்கி வந்த 104 ஆண்டுகள் பழமை வாய்ந்த சொசியெத்தே புரோகிரேசீஸ்த் அரசு உதவி பெறும் பள்ளி கட்டடம் பழுதடைந்தது. இதனால், அங்கிருந்த மாணவர்களை, வைசியாள் வீதியில் உள்ள கட்டடத்திற்கு மாற்றப்பட்டனர். பழமையான பள்ளியை புதுப்பித்து, நிர்வகிக்க அரசு நிதி வழங்காத காரணத்தினால், பள்ளி நிர்வாகிகள், பழைய பள்ளி கட்டடத்தை பிரெஞ்சு உணவகத்திற்கு வாடகைக்கு விட்டனர்.
இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் கடந்த 7ம் தேதி விரிவாக செய்தி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பள்ளியை அரசு ஏற்று நடத்த வேண்டும் என, பள்ளியின் முன்னாள் மாணவர்கள், பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், ராஜ்பவன் தொகுதி எம்.எல். ஏ.,வும், பொதுப்பணித்துறை அமைச்சருமான லட்சுமிநாராயணன், சொசியெத்தே புரோகிரேசீஸ்த் பள்ளி குறித்து 'தினமலர்' நாளிதழில் வந்த செய்தியை சுட்டிக்காட்டி, பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயத்திற்கு கடந்த 8 ம் தேதி கடிதம் அனுப்பியுள்ளார்.
கடிதத்தில் அமைச்சர் லட்சுமிநாராயணன் கூறியிருப்பதாவது:
புதுச்சேரியில் பல கல்வியாளர்களை உருவாக்கிய சொசியெத்தே புரோகிரேசீஸ்த் பள்ளி,
கல்வித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால், பிரெஞ்சு உணவகத்திற்கு வாடகை விட்டிருப்பது, அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. அதனை தவிர்க்க, இப்பள்ளியை அரசே ஏற்று நடத்த முன் வரவேண்டும்.
லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தால் நடத்தப்பட்ட 'போன்ேஷ' பள்ளியை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கடந்த 2004ம் ஆண்டு அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று, அறக்கட்டளையால் நடத்தப்படும் புகழ் பெற்ற சொசியெத்தே புரோகிரேசீஸ்த் பள்ளியை உணவகத்திற்கு குத்தகைக்கு விடுவது, இப்பள்ளி துவங்கப்பட்டதன் நோக்கத்தை நிர்மூலமாக்கும் செயலாக உள்ளது.
எனவே, கூட்டுறவு பள்ளிக்கு செய்தது போல், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுடன் இப்பள்ளியை கையகப்படுத்தி, பள்ளி தொடங்கப்பட்டதன் நோக்கத்தை நிறைவேற்றவும், அரசுக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயரை தவிர்க்க தேவையான நடவடிக்கையை அரசு எடுக்கலாம்.
மேலும், எந்தவொரு பொது அறக்கட்டளையும் தொடங்கப்பட்டதன் நோக்கத்தை மீறுவதை கண்டறியப்பட்டால், அதன் நலனை பாதுகாக்க அறக்கட்டளையை அரசு கையகப்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.
இவற்றை கருத்தில் கொண்டும், விமர்சனங்களை தவிர்க்கவும் சொசியெத்தே புரோகிரேசீஸ்த் பள்ளியை அரசு கையகப்படுத்த கல்வித்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.