/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உதய நாளை மறந்த போலீஸ் மறைக்கப்படும் வரலாறு
/
உதய நாளை மறந்த போலீஸ் மறைக்கப்படும் வரலாறு
ADDED : அக் 05, 2024 11:13 PM
புதுச்சேரி 1954ம் ஆண்டு பிரெஞ்சு ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றாலும், போலீஸ் நிர்வாகம் மட்டும் கடந்த 30.09.1963 வரை பிரெஞ்சு கோட்பாடுகளுடன் செயல்பட்டு வந்தது.
கடந்த 1.10.1963ம் ஆண்டுக்கு பிறகே இந்திய சட்டம் மற்றும் காவல் சட்டம் புதுச்சேரியில் அமலுக்கு வந்தது. இந்த நாள், புதுச்சேரி போலீஸ் உதய நாளாக கொண்டாடப்படுகிறது.
போலீஸ் உதய நாள் அன்று, கோரிமேடு மைதானத்தில் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையும், சிறப்பாக பணியாற்றி போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும். பணியின்போது உயிரிழந்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தப்படும். அனைத்து போலீஸ் நிலையங்கள் சுத்தம் செய்து, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும்.
கொரோனா காரணமாக கடந்த 2020ம் ஆண்டு போலீஸ் உதயநாள் விழா ரத்து செய்யப்பட்டது. அதே ஆண்டு பல விழாக்கள் ரத்து செய்யப்பட்டது. கொரோனா தாக்கம் குறைந்த பின்பு வழக்கம்போல் அனைத்து விழாக்களும் நடக்க துவங்கி விட்டது.
ஆனால் புதுச்சேரி போலீஸ் வரலாற்றை உணர்த்தும், உதய நாள் விழா மட்டும் 5வது ஆண்டாக நடத்தப்படாமல் விடப்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால், போலீஸ் பணியில் சேரும் இளம் காவலர்களுக்கு, புதுச்சேரி போலீஸ் குறித்த வரலாறு தெரியாமல் மறைக்கப்படும் என ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.