/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தீபாவளி எதிரொலி பூக்களின் விலை விர்ர்...
/
தீபாவளி எதிரொலி பூக்களின் விலை விர்ர்...
ADDED : அக் 20, 2025 12:17 AM

புதுச்சேரி: தீபாவளியை முன்னிட்டு, புதுச்சேரியில் குண்டு மல்லி, அரும்பு பூக்கள் அதிக விலைக்கு விற்பனையானது.
புதுச்சேரி நகர பகுதிகளில் உள்ள பூ மார்கெட்டிற்கு, வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவில் பூக்கள் கொண்டு வரப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு, பூக்களின் விலை நேற்று வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது. அதன்படி, கடந்த வாரம் கிலோ ரூ. 400க்கும் விற்கப்பட்ட குண்டுமல்லி ரூ.1,600க்கும், முல்லை ரூ. 360ல் இருந்து 1,200 ரூபாய்க்கும் விற்பனையானது.
ரூ. 120க்கும் விற்பனையான சாமந்தி ரூ.320, ரூ. 240க்கு விற்ற குஷ்பு சாமந்தி ரூ.400, பன்னீர் ரோஸ் ரூ.400க்கும் விற்பனை செய்யப்பட்டது.
ரோஸ் ஓசூரில் இருந்தும், குண்டுமல்லி, அரும்பு, சாமந்தி பூக்கள் திருவண்ணாமலை, திண்டிவனம், விழுப்புரம் பகுதிகளில் இருந்து விற்பனைக்கு வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.