/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புனித சந்தனமாதா ஆலய மின் அலங்கார தேர் பவனி
/
புனித சந்தனமாதா ஆலய மின் அலங்கார தேர் பவனி
ADDED : ஜூலை 28, 2025 01:48 AM

காரைக்கால்: காரைக்கால் புனித சந்தனமாதா ஆலய திருவிழா முன்னிட்டு
மின் அலங்காரத் தேர் பவனி நடந்தது.
காரைக்கால் நெடுங்காடு சாலை பிள்ளைத்தெருவாசல் புனித சந்தனமாதா ஆலயத்தின் ஆண்டு திருவிழா கடந்த 24ம் தேதியகொடியோற்றத்துடன் துவங்கியது.
இதனையொட்டி தினம் சிறப்பு திருப்பலி நடந்தது. கடந்த 25ம் தேதி சிறிய தேர்பவனி, தொடர்ந்து நற்செய்தி செபக்கூட்டம் நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் திருப்பலியும்,மின் அலங்கார தேர்பவனி, புதுச்சேரி, கடலுார் உயர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் நடந்தது. நேற்று நன்றித் திருப்பலி முடிந்து கொடியிறக்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் அமைச்சர் திருமுருகன், ஆலய பங்கு தந்தை பால்ராஜ்குமார். இணை பங்கு தந்தை சாமுவேல்.காங்., மாவட்டத் தலைவர் சந்திரமோகன். இளைஞர் காங்., மாவட்டத் தலைவர் ரஞ்சித் மற்றும் பஞ்சாயத்தார்கள் ஆரோக்கியதாஸ், சின்னப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.