/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆக்கிரமிப்பு கடைகள் அதிரடியாக அகற்றம் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு
/
ஆக்கிரமிப்பு கடைகள் அதிரடியாக அகற்றம் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு
ஆக்கிரமிப்பு கடைகள் அதிரடியாக அகற்றம் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு
ஆக்கிரமிப்பு கடைகள் அதிரடியாக அகற்றம் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு
ADDED : செப் 20, 2024 03:31 AM

புதுச்சேரி: புதுச்சேரி தலைமை செயலகம் அருகே பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றிய அதிகாரிகளை பொதுமக்கள் பாராட்டினர்.
புதுச்சேரி, நகரப்பகுதியில் சாலையோர ஆக்கிர மிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது மட்டுமின்றி, விபத்துகளும் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து கடந்த வாரம் முதல் நகர பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை, பொதுப்பணி மற்றும் நகராட்சி ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றி வருகின்றனர்.
இந்நிலையில், தலைமை செயலகம் எதிரில் காபி மற்றும் டீ கடைகள் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இயங்கி வருவதாகவும், தலைமை செயலக அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது.
அதனை அறிந்த கவர்னர் கைலாஷ்நாதன், தலைமை செயலகம் எதிரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தர விட்டார். அதனைத் தொடர்ந்து, தலைமை செயலகம் அருகே ஆக்கிரமிப்பு கடை களை நகராட்சி அதிகாரிகள் நேற்று அகற்ற சென்றனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்ற கடை உரிமையாளர்கள் சிலர், எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிலர், பொக்லைன் முன், படுத்து கொண்டு, எழுந்திருக்க மறுத்தனர்.
போலீசார் அவர்களை அப்புறப்படுத்தி, ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
அதிரடி தொடரனும்
புதுச்சேரி கவர்னராக கிரண்பேடி இருந்தபோது, காந்தி வீதியில், காபி மற்றும் டீ கடை முன் இருந்த சாலை ஆக்கிரமிப்பை அப்போதைய நகராட்சி கமிஷனர் சந்திரசேகரன் அகற்றினார். உடன் கடை ஊழியர்கள், அவரை முற்றுகையிட்டனர்.
இந்த சம்பவத்தில், கமிஷனர் சந்திரசேகரன் தாக்கப்பட்டார். அதன்பிறகு, புதுச்சேரியில் ஆக்கிரமிப்பு அகற்றம் என்பது பெயரளவில் மட்டுமே நடந்து வந்தது.
இந்நிலையில், தலைமை செயலகம் எதிரில் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இயங்கி வந்த மூன்று கடைகளை இடித்து அகற் றிய கமிஷனர் கந்தசாமியின் துணிச்சலை, பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
மேலும், இதேபோன்று, புதுச்சேரி நகரின் அனைத்து பகுதிகளிலும் குறிப்பாக போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள செட்டித் தெரு, வைசியாள் வீதி, மிஷன் வீதி, அம்பலத்தடையார் வீதி, புஸ்சி வீதி, காந்தி வீதி, எஸ்.வி.பட்டேல் சாலை நேரு வீதி, சுப்பையா சாலை உள்ளிட்ட புல்வார் பகுதிகளில் உள்ள சாலை ஆக்கிரமிப்புகளை துணிச்சலுடன் அகற்ற வேண்டும். இதற்கு கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.