/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை திடீர் சாவு உறவினர்கள் முற்றுகையால் பரபரப்பு

ADDED : ஆக 01, 2025 02:30 AM

காரைக்கால்: காரைக்கால் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை திடீரென இறந்ததால், ஆத்திரமடைந்த உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
காரைக்கால், அம்மன் கோவில் பத்து, எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் தினேஷ்; டிரைவர். இவரது மனைவி அபிநயா. கர்ப்பிணியான இவருக்கு நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, அரசு மகப்பேறும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மதியம் 1:00 மணியளவில் பெண் குழந்தை பிறந்தது.
சிறிது நேரத்தில் குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த தினேஷின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு மருத்துவ அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
தகவல் அறிந்த நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.