/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'தினமலர்' அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி புதுச்சேரியில் வரும் 12ம் தேதி நடக்கிறது
/
'தினமலர்' அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி புதுச்சேரியில் வரும் 12ம் தேதி நடக்கிறது
'தினமலர்' அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி புதுச்சேரியில் வரும் 12ம் தேதி நடக்கிறது
'தினமலர்' அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி புதுச்சேரியில் வரும் 12ம் தேதி நடக்கிறது
ADDED : அக் 08, 2024 02:58 AM
புதுச்சேரி: 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம் இதழ்' மற்றும் தி ஸ்காலர் பள்ளி, ஓம்சக்தி மாறன் இன்பரா புராஜெக்ட் சார்பில், வரும் 12ம் தேதி 'அரிச்சுவடி ஆரம்பம்' நிகழ்ச்சி புதுச்சேரியில் நடக்கிறது.
'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான 'பட்டம் இதழ்' மற்றும் கோர்காடு தி ஸ்காலர் பள்ளி, ஓம்சக்தி மாறன் இன்பரா புராஜெக்ட் இணைந்து நடத்தும், 'அரிச்சுவடி ஆரம்பம்' எனும் வித்யாரம்பம் நிகழ்ச்சி, புதுச்சேரி மறைமலையடிகள் சாலை, வெங்கட சுப்பா ரெட்டியார் சிலை, லட்சுமி பெட்ரோல் பங்க் பின்புறம் உள்ள என்.எஸ். போஸ் மகாலில் நடைபெற உள்ளது.
விஜயதசமி அன்று (12ம் தேதி) காலை 7:00 முதல் 9:30 மணி வரை நடைபெற உள்ள நிகழ்ச்சியில், 2.5 முதல் 3.5 வயதுள்ள மழலைகளின் விரல் பிடித்து கல்வியாளர்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பிரபலங்கள் 'அ -ஆ' எழுதி பழக்க உள்ளனர்.
குழந்தைகள் கல்வி கற்க துவக்கி வைக்கும், மிக முக்கியமான நாள். குழந்தைகளின் ஆரம்ப நிலை கல்வியறிவு தான் அவர்களது அறிவாற்றலுக்கும், நற்பண்புகளுக்கும் வாழ் நாள் முழுதும் துணை நிற்கும்.
விஜயதசமி திருநாள் கல்வியை கற்கும் வித்யாரம்பத்துக்கு உகந்த நாள். இந்நாளில் உங்கள் வீட்டு இளந்தளிர்களின் பிஞ்சு விரல் பிடித்து அரிச்சுவடியை ஆரம்பித்து வைக்க கல்வியாளர்கள், அரசு உயர் அதிகாரிகள் காத்திருக்கிறார்கள்.
நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இலவசம். ஆனால் முன் பதிவு செய்த குழந்தைகள் மட்டுமே பங்கேற்க முடியும். பங்கேற்கும் அனைத்து குழந்தைகளுக்கும், 'ஸ்கூல் கிட்' பரிசாக வழங்கப்படும். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க, 95973 26264, 78714 79674 ஆகிய மொபைல் போன்களில் காலை 9:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். கல்வி கோவிலுக்கு அடியெடுத்து வைக்க உங்க செல்ல குட்டீஸ்களை காலை 7:00 மணிக்குள், விழா அரங்கிற்கு அழைத்து வாருங்கள்.