sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

'காங்., போராட்டத்தில் தி.மு.க., பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லை' எதிர்க்கட்சி தலைவர் சிவா 'பளீச்'

/

'காங்., போராட்டத்தில் தி.மு.க., பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லை' எதிர்க்கட்சி தலைவர் சிவா 'பளீச்'

'காங்., போராட்டத்தில் தி.மு.க., பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லை' எதிர்க்கட்சி தலைவர் சிவா 'பளீச்'

'காங்., போராட்டத்தில் தி.மு.க., பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லை' எதிர்க்கட்சி தலைவர் சிவா 'பளீச்'


ADDED : ஜன 22, 2025 08:56 AM

Google News

ADDED : ஜன 22, 2025 08:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமையில் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அனிபால் கென்னடி, சம்பத் ஆகியோர் நேற்று கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து மனு அளித்தனர்.

மனு விபரம்:

ராணுவம் மற்றும் ஊர்க்காவல்படைப் பிரிவினருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் அரசாணை வெளியிட்டுள்ளது.

அதனடிப்படையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் காலியாக உள்ள 119 கிராம உதவியாளர் பணியிடங்களை 30 சதவீதத்தின்படி 36 பணியிடங்கள் 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஊர்க்காவல்படை வீரர்களுக்கு பணிமூப்பு அடிப்படையில் நிரப்ப வேண்டும்.

உள்ளாட்சித் துறையில் பணியாற்றும் தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். வெள்ளத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.

கால்நடை துறையில் 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் 83 தினக்கூலி ஊழியர்களுக்கு ரூ. 18 ஆயிரம் மாத சம்பளமாக வழங்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

பின், எதிர்கட்சித் தலைவர் சிவா கூறுகையில், 'மதுபான ஆலைகளுக்கு அரசு அனுமதி வழங்கியதில் தவறு நடந்திருப்பது உறுதியாக தெரிகிறது.

அதில் வெளிப்படை தன்மை இல்லாமல் வேண்டியவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கான உரிமம் வழங்கும் போது, நடவடிக்கை எடுக்கப்படும்.

தொழில்நுட்ப பல்கலையில் மாணவி பாதித்த விவகாரத்தில், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்பிறகும், அதனை அரசியல் செய்ய பார்க்கின்றனர்.

காங்., நடத்தும் அனைத்து போராட்டதிலும் தி.மு.க., பங்கேற்க வேண்டிய அவசியமில்லை' என்றார்.






      Dinamalar
      Follow us