sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதுச்சேரியில் திருக்குறள் கின்னஸ் உலக சாதனை மாநாடு

/

புதுச்சேரியில் திருக்குறள் கின்னஸ் உலக சாதனை மாநாடு

புதுச்சேரியில் திருக்குறள் கின்னஸ் உலக சாதனை மாநாடு

புதுச்சேரியில் திருக்குறள் கின்னஸ் உலக சாதனை மாநாடு

1


ADDED : ஜன 26, 2025 04:50 AM

Google News

ADDED : ஜன 26, 2025 04:50 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருபுவனை: புதுச்சேரி கலிதீர்த்தாள்குப்பம் காமராசர் அரசு கலைக் கல்லுாரியில் ஆசு கவி தமிழாய்வு மையம் மற்றும் சென்னை உலகத் திருக்குறள் மையம் இணைந்து, 'திருவள்ளுவர் கண்ட மனம்' எனும் தலைப்பில் கருத்தரங்கம் மற்றும் ஆய்வு நுால் வெளியீடு 'கின்னஸ் உலக சாதனை மாநாடு-100' நேற்று நடந்தது.

இந்நிகழ்ச்சி லண்டன் ஆஸ்திரேலியா, இலங்கை, கனடா, சிங்கப்பூர், துபாய், பெங்களூரு, தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட உலகம் முழுதும் 100 இடங்களில் ஒரே நேரத்தில் நேரடியாக ஒளிபரப்பப் பட்டது. மாநாட்டு நிகழ்ச்சியை லண்டனிலிருந்து 15 பேர் கொண்ட குழுவினர் நேரடியாக கண்காணித்தனர்.

100 இடங்களில் வெளியிடப்பட்டுள்ள 1,500க்கும் மேற்பட்ட கட்டுரைகள் அடங்கிய நுால்கள் சென்னை பல்கலைக்கழகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த ஆய்வரங்கம், சென்னை உலகத் திருக்குறள் மைய இயக்குனர் மோகனராசு முயற்சியால், 100 இடங்களில் மாநாடு நடத்துவது என, திட்டமிடப்பட்டது. இதற்கு 'லண்டன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்' செயலர் ரோகினி உறுதுணையாக இருந்தார்.

புதுச்சேரி கலிதீர்த்தாள்குப்பம் காமராஜர் அரசு கலைக் கல்லுாரியில் நடந்த மாநாட்டிற்கு கல்லுாரி முதல்வர் கனகவேல் தலைமை தாங்கினார். பேராசிரியை சவுந்தரவள்ளி முன்னிலை வகித்தார். தமிழ்த் துறை தலைவர் சரவணன் வரவேற்றார்.

மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் தாகூர் அரசு கல்லுாரி தமிழ் துறை பேராசிரியை விஜயராணி நோக்க உரையாற்றினார். புதுச்சேரி சமுதாயக் கல்லுாரி தமிழ் துறை பேராசிரியர் முருகையன் வாழ்த்துரை வழங்கினார்.

உலக சாதனை மாநாட்டு ஆய்வு நுாலினை கல்லுாரி முதல்வர் கனகவேல் வெளியிட சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக் கொண்டனர்.

புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரி தமிழ் துறை பேராசிரியை பட்டம்மாள், திருவள்ளுவர் கண்ட மனம் எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியை மாணவி பவிஸ்ஸ்ரீ தொகுத்து வழங்கினார்.

திருக்குறள் உலக சாதனை மாநாடு ஆய்வரங்கில் 17 கட்டுரைகள் ஆய்வுக்கு சமர்ப்பிக்கப்பட்டன.






      Dinamalar
      Follow us