/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருமுருகன் எம்.எல்.ஏ., அமைச்சராக நியமனம்
/
திருமுருகன் எம்.எல்.ஏ., அமைச்சராக நியமனம்
ADDED : மார் 06, 2024 12:38 AM

புதுச்சேரி : புதுச்சேரி காரைக்கால் மாவட்ட என்.ஆர்.காங்., எம்.எல்.ஏ., திருமுருகனுக்கு, அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்., பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. புதுச்சேரி அமைச்சரவையில் 4 அமைச்சர்கள் இருந்தனர்.
இதில், காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு (தனி) தொகுதி என்.ஆர்.காங்., எம்.எல்.ஏ. சந்திரபிரியங்கா, போக்குவரத்து துறை, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 8ம் தேதி சந்திரபிரியங்காவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி,கவர்னர் தமிழிசையிடம் முதல்வர் ரங்கசாமி கடிதம் வழங்கினார்.
சந்திரபிரியங்காவின் அமைச்சர் பதவி நீக்கத்தை ஜனாதிபதியும் ஏற்றுக் கொண்டார்.அதையடுத்து, அவர் வகித்து வந்ததுறைகள் புதுச்சேரி அமைச்சரவையில்யாரிடமும்அளிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், காரைக்கால் வடக்கு தொகுதி என்.ஆர்.காங்., எம்.எல்.ஏ., திருமுருகன் அமைச்சராக நியமிக்க முதல்வர் ரங்கசாமி, ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினார். ஜனாதிபதியும் ஏற்றுக் கொண்டார்.
அதற்கான அரசாணை மத்திய அரசின் உள்துறை இணை செயலாளர் அசுகோஷ் அக்னிகோத்ரி வெளியிட்டுள்ளார். அதில், புதுச்சேரி அமைச்சராக திருமுருகன் நியமிக்க ஜனாதிபதி ஒப்புதல் தந்துள்ளார்.திருமுருகன் அமைச்சராக பதவியேற்ற நாள் முதல் இது அமலுக்கு வரும் என அதில் தெரிவித்துள்ளார்.
திருமுருகன் எம்.எல்.ஏ., கடந்த 2011ம் ஆண்டு முதல் 2016 வரையிலும், 2016 முதல் 2021 வரை காரைக்கால் வடக்கு தொகுதி காங்., எம்.எல்.ஏ.வாக பதவி வகித்தார்.அடுத்து,2021 முதல் காரைக்கால் வடக்கு தொகுதியில் என்.ஆர்.காங்., சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாகஇருந்து வருகிறார்.மேலும், என்.ஆர்.காங்., காரைக்கால் மாவட்ட தலைவராகவும்உள்ளார்.
இவர், முன்னாள் எம்.எல்.ஏ., நளமகராஜன் மகன் என்பது குறிப்பிடதக்கது. திருமுருகன் பதவியேற்பு நாள் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்புஇதுவரைவெளியாகவில்லை.

