நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : திருவாடுதுறை ஆதீன புதுச்சேரி கிளை சார்பில், உலக நன்மை வேண்டி, திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி இன்று காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை, கிருஷ்ணா நகரில் நடக்கிறது.
நிகழ்ச்சியில், திருவாடுதுறை ஆதீன புதுச்சேரி கிளை மைய ஓதுவாமூர்த்தி, வசந்தி முத்துகுமராவேல் தலைமையில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை அமைப்பாளர் சேகர், துணை அமைப்பாளர் ராஜாபாதர் ஆகியோர் செய்துள்ளனர்.

