/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கடந்த ஆட்சியில் ஒன்றுமே செய்யாதவர்கள் தற்போது எதுவும் நடக்கவில்லை என்கின்றனர்: முதல்வர் காட்டம்

ADDED : நவ 27, 2024 11:20 PM
புதுச்சேரி : கடந்த ஆட்சியில் ஒன்றுமே செய்யாதவர்கள் இந்த ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை என கூறுவது என்ன அர்த்தம் என, முதல்வர் ரங்கசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர், கூறியதாவது;
புதுச்சேரியில் முன்பு போல் எங்கும் தண்ணீர் தேங்குவது கிடையாது. இதற்கு முன் இருந்த ஆட்சிக்கும், தற்போதுள்ள நிலையைநீங்களே பாருங்கள். பேரிடர் மேலாண்மைக்கு தேவையான நிதி உள்ளது. தேவைப்பட்டால் மத்திய அரசிடம் கேட்போம். தரமான சாலை அமைக்கப்பட்டுள்ளது. கொம்பாக்கம், அரும்பார்த்தபுரம் சாலை, வழுதாவூர் சாலையை பாருங்கள்.
கடந்த ஆட்சியில் உள்ளாட்சித்துறையில் தொகுதி மேம்பாட்டு நிதி ஒரு பைசா கூட வழங்கவில்லை.தற்போது ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வுக்கும் ரூ. 2 கோடி கொடுத்துள்ளோம். ஜனவரி முதல் உள்ளாட்சித்துறை வேலைகள் துவங்க உள்ளது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ. 55 கோடி மொத்த டெண்டரில் ரூ. 29 கோடி ஊழல் என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுகிறது. மீதி தொகையில் எப்படி அடுக்குமாடி குடியிருப்பு, பஸ் நிலையம் கட்ட முடியும். நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
பஸ் நிலைய கட்டுமான பணி முடியும் தருவாயில் உள்ளது. விரைவில் திறக்கப்படும்.56 ஆயிரம் பெண்களுக்கு உதவித்தொகை கொடுத்து உள்ளோம். எல்.டி.சி., யு.டி.சி., ஆசிரியர், போலீஸ், பொதுப்பணித்துறை என இதுவரை 4,000 பணியிடம் நிரப்பி உள்ளோம்.
கடந்த ஆட்சியில் ஒன்றுமே செய்யாதவர்கள் தற்போது எதுவும் நடக்கவில்லை என கூறுவது என்ன அர்த்தம். கோப்புகளுக்கு கவர்னர் அனுமதி அளிப்பதால் தான் பணிகள் விரைவாக நடக்கிறது. கவர்னர் விழாவில் கலந்து கொள்ளவில்லை எனில் கருத்து வேறுபாடு என கூறுவதா?
ரூ. 29 கோடிக்கு டெண்டர் விட்டு உப்பனாறு பாலம் துவங்க உள்ளோம்' என்றார்.