/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காதல் விவகாரத்தில் வாலிபரை தாக்கிய மூவர் கைது
/
காதல் விவகாரத்தில் வாலிபரை தாக்கிய மூவர் கைது
ADDED : பிப் 12, 2025 03:56 AM
புதுச்சேரி: ஆலங்குப்பத்தில் காதல் பிரச்னை காரணமாக, வாலிபரை விரட்டி தாக்குதல் நடத்திய கும்பலில், மூவரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி, ஆலங்குப்பம் பள்ளிகூட வீதியை சேர்ந்தவர் ராஜேஷ், 24; ஆரோவில் காபி ஷாப்பில் வேலை செய்கிறார். இவரும், சஞ்சீவி நகரை சேர்ந்தபெண் ஒருவரும் ஏற்கனவே காதலித்தனர். காதல் விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரிந்து கண்டித்ததால், இருவரும் பிரிந்தனர். அதன் பிறகு, ராஜேஷ் கடந்த 5 ஆண்டுகளாக ஓட்டம்பாளையத்தை சேர்ந்த வேறு ஒரு பெண்ணை காதலித்தார்.
இந்நிலையில், முதல் காதலி, தற்போது ராஜேஷ் காதலித்து வரும் பெண்ணிடம், அவரை பற்றி தவறாக கூறியுள்ளார். இதனால், இரு தரப்பிற்கும் தகராறு ஏற்பட்டதால், போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இதனால், முதல் காதலியின் சகோதரர் சிவராமன், ராஜேஷிடம் தகராறு செய்து வந்தார். கடந்த 8ம் தேதி, ராஜேஷ் ஆரோவில் காபி ஷாப் வேலைக்கு பைக்கில் புறப்பட்டு, ஆலங்குப்பம் பள்ளி கூட வீதி அருகே சென்றபோது,அப்பெண்ணின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்கள் வழிமறித்து நிறுத்தி, ராஜேஷை திட்டி,இரும்பு பைப், உருட்டு கட்டையால் தாக்கி, கத்தியால் வெட்ட முயன்றனர். பொது மக்கள் கூடியதால், உள்ளிட்டோர் தப்பினர். காயமடைந்த ராஜேஷ், ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். புகாரின் பேரில், சிவராமன் உட்பட 6 பேர் மீது, கோரிமேடு போலீசார், கொலை மிரட்டல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, சிவராமன், சந்திரமவுலீஸ்வரன், தமிழரசன் ஆகியோரை நேற்று கைது செய்தனர். தப்பியோடிய விஜய், பிரகாஷ், சந்தோஷ் ஆகியோரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

