/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கார் மோதி பைக்கில் சென்ற மூவர் காயம்
/
கார் மோதி பைக்கில் சென்ற மூவர் காயம்
ADDED : அக் 07, 2025 12:51 AM
காரைக்கால்; காரைக்கால் புறவழிச்சாலையில் பைக் மீது கார் மோதிய விபத்தில் தந்தை, இரு மகன்கள் படுகாமடைந்தனர்.
காரைக்கால் கீழக்காசாகுடி ரபிக் நகரை சேர்ந்தவர் செல்வகணேசன், 52; தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.நேற்று முன்தினம் செல்வகணேசன் பைக்கில் தனது மகன் ஈஸ்வர்,அபினேஷ்வர் ஆகியோருடன் புறவழிச்சாலை ஜிப்மர் கல்லுாரி அருகில் சென்றபோது அந்த வழியாக அதிவேகமாக வந்த கார் ஒன்று பைக் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த செல்வகணேசன் உள்ளிட்ட மூவரையும் அருகில் இருந்தவர்கள் அரசு மருந்துவனையில் சேர்த்தனர்.
புகாரின் பேரில் நகர போக்குவரத்து போலீசார் கார் டிரைவர் முஹமது சுல்தான், 60; மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.