sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சாரதாம்பாள் கோவிலில் 4ம் தேதி தியாகராஜ சுவாமி ஜெயந்தி விழா

/

சாரதாம்பாள் கோவிலில் 4ம் தேதி தியாகராஜ சுவாமி ஜெயந்தி விழா

சாரதாம்பாள் கோவிலில் 4ம் தேதி தியாகராஜ சுவாமி ஜெயந்தி விழா

சாரதாம்பாள் கோவிலில் 4ம் தேதி தியாகராஜ சுவாமி ஜெயந்தி விழா


ADDED : ஏப் 29, 2025 04:32 AM

Google News

ADDED : ஏப் 29, 2025 04:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி, எல்லைப்பிள்ளைச்சாவடி, சாரதாம்பாள் கோவிலில், சிருங்கேரி சிவகங்கா மடம் சார்பில் தியாகராஜ சுவாமிகளின் 258 வது ஜெயந்தி விழா வரும் 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை நடக்கிறது.

இவ்விழா வரும் 1ம் தேதி மாலை 5:00 மணிக்கு விநாயகர் பூஜையுடன் துவங்கி, ஸ்ரீராம சீதா லட்சுமணி ஆஞ்சநேய சமேத பட்டாபிேஷக தியாகராஜர் ஆவாஹன பூஜை நடக்கிறது. தொடர்ந்து திருஞானசம்பந்தர் குழுவினரின் இசை அமுதம், கொட்டாரக்கரை பாலமுரளி குழுவினர் பாட்டு, ஸ்ரீவில்லிபுத்துார் விஜயலட்சுமி குழுவினர் மற்றும் அரிமளம் பத்மநாபன் குழுவினர் பாட்டு நிகழ்ச்சி நடக்கிறது.

மறுநாள் 2ம் தேதி காலை 8:00 மணிக்கு ஸ்ரீபக்த மீரா குழுவினர் இசை அமுதம், புதுச்சேரி மாதா அமிர்தானந்தமயி சேவா சமிதி குழுவினர் பஜன், பாரதியார் பல்கலைக்கூட மாணவர்களின் இசை அமுதம், நெய்வேலி லலிதா ராஜூலு குழுவினர் பாட்டு. மாலை 5:00 மணிக்கு யோகாஞ்சலி நாட்டியாலயா திவ்யப்ரியா பவனானி குழுவினர் இசை அமுதம், தேவசேனா பவனானி குழுவினர் பாட்டு, பானுமதி குழுவினர் வீணை, காயத்ரி கிரீஷ் பாட்டு நிகழ்ச்சி நடக்கிறது.

3ம் தேதி காலை ஸ்ரீகிருஷ்ண பிரேமிக பஜனை மண்டலியின் தோடய மங்களம் மற்றும் உஞ்சவ்ருத்தி பஜனை, ஆண்டாள் குழுவினர் இசை அமுதம் நடக்கிறது. தொடர்ந்து பாரதி அரவிந்த், சங்கரி முருகானந்தம் குழுவினர் மற்றும் ஜெகதீசன் குழுவினர் பாட்டு நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு தியாகராஜர் குழுவினர் மற்றும் முத்துசாமி தீட்சதர் குழுவினர்களின் இசைஅமுதம், காயத்ரி ஜெயராமன் குழுவினர் மற்றும் சுனில் கார்கேயன் பாட்டு.

தியாகராஜ சுவாமிகளின் 258 வது ஜெயந்தி தினமான 4ம் தேதி காலை 8:00 மணிக்கு தியாகராஜ சுவாமி ஜனன உற்சவம், சண்முகம் குழுவினரின் மங்கல இசை, பிரபல இசை கலைஞர்கள் பங்கேற்கும் பஞ்சரத்ன கீர்த்தனைகள் நடக்கிறது. தொடர்ந்து காலை 10:30 மணிக்கு புவனா கார்த்தி குழுவினர் பாட்டு, என்.எஸ்.எஸ். மிருதங்கம் ஆர்ட்ஸ் அகாடமி மாணவர்களின் தாளமாலை, கீர்த்திலட்சுமி குழுவினரின் பாட்டு. மாலை 5:00 மணிக்கு பாலு சுவாமி தீட்சதர் குழுவினர் வயலினிசை, ஜோதிர்மயி, வித்யாசங்கரி குழுவினர் பாட்டு, ஆனந்த பாலயோகி பவனானி குழுவினர் பாட்டு, சண்முகப்ரியா, ஹரிப்ரியா பாட்டு நடக்கிறது.






      Dinamalar
      Follow us