/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாலியல் வன்கொடுமை ஆசிரியர்களின் கல்வி சான்றிதழை ரத்து செய்ய வேண்டும்

ADDED : பிப் 19, 2025 05:00 AM
புதுச்சேரி : பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் ஆசிரியர்களின் கல்வி சான்றிதழை ரத்து செய்ய வேண்டுமென, ஹோப் நிறுவன இயக்குனர் ஜோசப் விக்டர்ராஜ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, கல்வி அமைச்சர் மற்றும் செயலருக்கு, அவர் அனுப்பியுள்ள கடிதம்: புதுச்சேரியில் தனியார் பள்ளி ஆசிரியர் மணிகண்டன், சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவம், கல்வி நிறுவனங்களில், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதற்கானதேவையை வெளிப்படுத்தியுள்ளது.
தமிழக அரசு, குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் ஆசிரியர்களை பணி நீக்கம் செய்வது, கட்டாய ஓய்வு மற்றும் கல்விச் சான்றிதழை ரத்து செய்தல் ஆகிய தண்டனைகளை பரிந்துரைத்துள்ளது.
இதுபோல், புதுச்சேரியிலும், குழந்தைகளை பாதுகாக்க உடனடி நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.பள்ளிகளில் பாலியல் கொடுமை புகாரளித்தல், விசாரித்தல் மற்றும் வழக்கு தொடுத்தல் குறித்து வெளிப்படையான விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும்.
வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து பள்ளிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.