ADDED : ஜூலை 07, 2026 04:58 AM

புதுச்சேரி: புதுச்சேரி சுசிலாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பள்ளியின் துணை முதல்வர் ராஜவேலு சுகந்தி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் விஜய லட்சுமி முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லுாரியின் பயிற்சி டாக்டர்கள் கீர்த்திவாசன், மாதவன் மற்றும் மாநில புகையிலை கட்டுப்பாட்டு மைய அதிகாரி மணிமாறன் கலந்து கொண்டு, புகையிலை மற்றும் போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில், ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, மாணவிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டன.
ஆசிரியர் சரவணன் குமார் நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
