/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இன்று இணைய வழி கருத்தரங்கம் சென்டாக் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம்

ADDED : மே 16, 2025 02:20 AM
புதுச்சேரி: சென்டாக் விண்ணப்ப சந்தேகங்களுக்கு இன்று நடக்கும் இணைய வழி கருத்தரங்கம் மூலம் விளக்கம் பெறலாம்.
சென்டாக்கில் யூ.ஜி., நீட் அல்லாத பாடப்பிரிவுகளுக்கான இணைய வழி விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கு கடந்த 12ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பம் வரவேற்கப்பட்டு வருகிறது.
விண்ணப்பிக்கும் மாணவர்கள் பலருக்கும் கலந்தாய்வு, மாணவர் சேர்க்கை தொடர்பாக விளக்கம் அளிக்க இன்று 16ம் தேதி மாலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை இணையவழி கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆர்வம் உள்ள பெற்றோர்கள், மாணவர்கள் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம். சென்டாக்கில் விண்ணப்பிப்பது மற்றும் கலந்தாய்வு நடைமுறைகள் பற்றி விளக்கம் அளிக்கப்படும். அதன் பின்னர் மாணவர்கள், பெற்றோர் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை சென்டாக் அதிகாரிகளிடம் கலந்துரையாடி தெளிவுபடுத்தி கொள்ளலாம். இணைய வழி கலந்துரையாடலில் பங்கேற்க உள்ள மாணவர்கள் https://meet.google.com/noi-vyro-uao என்ற இணையம் வழியாக பங்கேற்கலாம்.