/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுற்றுலா சர்வதேச புரிதலை உருவாக்குகிறது துணைவேந்தர் தரணிக்கரசு பேச்சு
/
சுற்றுலா சர்வதேச புரிதலை உருவாக்குகிறது துணைவேந்தர் தரணிக்கரசு பேச்சு
சுற்றுலா சர்வதேச புரிதலை உருவாக்குகிறது துணைவேந்தர் தரணிக்கரசு பேச்சு
சுற்றுலா சர்வதேச புரிதலை உருவாக்குகிறது துணைவேந்தர் தரணிக்கரசு பேச்சு
ADDED : செப் 26, 2024 03:18 AM

புதுச்சேரி, : சுற்றுலா சர்வதேச புரிதலை உருவாக்குகிறது என பல்கலைக்கழக துணை வேந்தர் தரணிக்கரசு பேசினார்.
புதுச்சேரி பல்கலைக்கழக சுற்றுலா ஆய்வு துறை சார்பில், உலக சுற்றுலா தினத்தையொட்டி, சுற்றுலா- அமைதி குறித்த பயிலரங்கம் நடந்தது.
மேலாண்மை பள்ளி டீன் மாலாபிகா தியோ தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் அனுசந்திரன் வரவேற்றார். மாணவர் நலன் டீன் வெங்கடராவ் நோக்கவுரையாற்றினார். பல்கலைக்கழக துணை வேந்தர் தரணிக்கரசு பயிலரங்கத்தை துவக்கி வைத்தார். கலாசார துறை இயக்குனர் கலியாபெருமாள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
பல்கலைக்கழக துணை வேந்தர் தரணிக்கரசு பேசும்போது,நவீன காலத்தில் சுற்றுலா என்பது அமைதிக்கான பயண சூழலை உருவாக்குவதோடு, சர்வதேச புரிதலையும் உருவாக்குகிறது. சுற்றுலாவில் திறனை வெளிப்படுத்தும்போது, அது கல்வி, கலாசார புரிதல் மற்றும் நிலையான வளர்ச்சியை மேம்படுத்தும் கருவியாகவும் விளங்குகின்றது. சுற்றுலா மூலம் உலககெங்கிலும் உள்ள மக்கள் இடையே நல்லெண்ணம், ஒற்றுமையை உருவாக்குகிறது.
இந்த அணுகுமுறை உலகின் மாறுபட்ட கலாச்சாரங்களை ஒருங்கிணைக்கும் முக்கிய பங்கு வகிக்கின்றது என்று குறிப்பிட்டார்.
மாணவர் ஒருங்கிணைப்பாளர் ராஜா விஜயகரன் நன்றி கூறினார்.

