/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருநங்கைகள் அடாவடி செயலால் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் ஓட்டம்
/
திருநங்கைகள் அடாவடி செயலால் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் ஓட்டம்
திருநங்கைகள் அடாவடி செயலால் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் ஓட்டம்
திருநங்கைகள் அடாவடி செயலால் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் ஓட்டம்
ADDED : ஆக 26, 2025 07:00 AM
புதுச்சேரி : மணக்குள விநாயகர் கோவிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகளிடம் திருநங்கைகள் அடாவடியாக பணம் பறிப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு வரும் வெளியூர் பயணிகள், நகரின் அடையாளங்களின் ஒன்றான மணக்குள விநாயகர் கோவிலுக்கு செல்லத் தவறுவதில்லை.
இதனால், இக்கோவில் எப்பொழுதும் பக்தர்கள் கூட்டம் நிறைந்தே காணப்படும்.
சமீப காலமாக இக்கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பெரும் தர்மசங்கடத்திற்கு உள்ளாகி வருகின்றனர். கோவிலில் இருந்து வெளியே வரும் பக்தர்களை, சூழ்ந்து கொள்ளும் திருநங்கைகள், தலையில் கையை வைத்து ஆசிர்வதிக்கின்றனர். பக்தர்களும், தங்களால் இயன்ற தொகையை அன்பளிப்பாக தருகின்றனர். ஆனால், அதனை வாங்க மறுக்கும் திருநங்கைகள்,உங்களுக்கு கல்யாணமாகி குழந்தை பொறந்திருக்கு.
நுாறு ரூபாய் காணிக்கையா தர. ஆத்தா வாயில் ஏதும் வராதபடி பார்த்து கொள்ளுமா.. 200 ரூபாய் கொடு என்று தலை மீது வைத்த கையை எடுக்காமல் கேட்கின்றனர். பணத்தை தராவிட்டால் சாபம் விட்டுவிடுவார்களா என்று அஞ்சி, வேறு வழியின்றி அவர்கள் கேட்கும் பணத்தை கொடுத்துவிட்டு, சாபமில்லாமல் தப்பித்தால் போதும் என ஓட்டம் பிடிக்கின்றனர்.
உச்சக்கட்ட அடாவடியாக, நேற்று முன்தினம் கோவிலுக்கு வந்த பெங்களூருவை சேர்ந்த சுற்றுலா பயணி இருவரை, ஆசிர்வதித்த திருநங்கை 500 ரூபாய் பணம் கேட்டார்.
அவர்களும், பரிதாபப்பட்டு, 500 ரூபாய் கொடுத்தனர். ஆனால் திருநங்கையோ பேராசையில், இது எனக்கு பத்தாது என கூறியபடி, சுற்றுலா பயணியின்கையில் இருந்த மேலும் இரண்டு 500 ரூபாய் நோட்டுகளை வெடுக்கென்று பிடுங்கி கொண்டார்.
அதிர்ச்சியடைந்த பெண் சுற்றுலா பயணி, நாங்கள் கையில் பணம் கொண்டு வரவில்லை. வழி செலவுக்கு பணமில்லை. எல்லாமே ஜிபேயில் உள்ளது. தயது செய்து பிடுங்கிய 1000 ரூபாயை திருப்பி தருமாறு கதறி அழுதார். ஆனால், திருநங்கை பணத்தை தர மறுத்துவிட்டார்.
அதனைக் கண்டு எரிச்சலடைந்த பொதுமக்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் சிலர் திருங்கையை கண்டித்தனர். அதனை உதாசீனப்படுத்திய திருநங்கை, போய் போலீசில் புகார் சொல்லு என கூலாக கூறினார்.
பணத்தை பறி கொடுத்த சுற்றுலா பயணி கூறுகையில், சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ள திருநங்கைளுக்கு பணம் கட்டாயம் தேவை. அதனால்தான் அவர் கேட்ட பணத்தை முழுதாக தந்தேன். ஆனால், திருநங்கை நடந்து கொண்டது சங்கடமாக உள்ளது. இப்படி இருந்தால் எப்படி நிம்மதியாக சுவாமியை தரிசிக்க முடியும். இந்த செயல், அமைதியான புதுச்சேரிக்கு தான் அவப்பெயர் ஏற்படும்.
சுற்றுலா வந்த இடத்தில் புகார் கொடுத்தால், போலீஸ், கோர்ட் என அலைய வேண்டியிருக்கும். எனவே புகார் கொடுக்க விருப்பம் இல்லை விரக்தியுடன் கூறினார்.
இந்த விவகாரம் குறித்த புகார் கவர்னர் அலுவலகத்திற்கும் சென்றுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் எவ்வித இடையூறுமின்றி சுவாமியை தரிசிக்க பெரியக்கடை போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.