/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நீல நிறத்தில் ஜொலித்த கடல் சுற்றுலா பயணிகள் உற்சாகம்
/
நீல நிறத்தில் ஜொலித்த கடல் சுற்றுலா பயணிகள் உற்சாகம்
நீல நிறத்தில் ஜொலித்த கடல் சுற்றுலா பயணிகள் உற்சாகம்
நீல நிறத்தில் ஜொலித்த கடல் சுற்றுலா பயணிகள் உற்சாகம்
ADDED : அக் 20, 2024 05:54 AM

புதுச்சேரி, : புதுச்சேரி கடல் அலைகள் 'புளோரசன்ட் நீல' நிறத்தில் ஜொலித்தபடி கரையில் மோதியதை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் படம் பிடித்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.
வங்க கடலில் கடந்த இரு தினங்களாக அலைகள் 'புளோரசன்ட் நீல' நிறத்தில் நிறத்தில் ஜொலித்தன. புதுச்சேரி ராக் கடற்கரையில், நேற்று கடல் அலை 'புளோரசன்ட் நீல' நீல நிறத்தில் ஜொலித்தபடி கரையை முட்டி மோதி கரைந்தன. இந்த அழகிய காட்சியை மக்கள் வியப்புடன் பார்த்து வீடியோ எடுத்து, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு மகிழ்ந்தனர்.
இதுகுறித்து கடல் வாழ் உயிரின உயர் ஆய்வு மைய பேராசிரியர் ஆறுமுகம் கூறியதாவது:
கடல் என்பது அதிக அளவு உயிரினங்கள் உள்ள பல்லுயிர் நிறைந்த பகுதி. இதில் நம் கண்களுக்கு தெரியாத பாக்ட்டீரியா மற்றும் பாசி போன்ற உயிரினங்கள் அதிகம் உள்ளன.
அதுபோன்று கடலில் வாழும் ஒரு செல் உயிரியான 'டைனோ ப்ளாச்சுலேட்' வகையை சேர்ந்த 'நாட்டிலுக்கா சின்டிலன்ஸ்' எனும் மிதவை நுண்ணுயிரியால் இப்போது கடல் நீல நிறத்தில் ஜொலித்து வருகிறது. இதனை 'சீ பார்க்கல்ஸ்' அல்லது கடல் பொறி என அழைக்கப்படுகிறது.
இந்த மிதவை நுண்ணுயிரி, கடலில் உள்ள நீரின் தன்மை மற்றும் அதற்கான உணவு ஊட்டச்சத்து சரியான விகிதத்தில் அமையும்போது சூரிய வெளிச்சத்தில் சார்ஜ் செய்து கொண்டு, இருளில் ஒளி வீசி ஜொலிக்கிறது. இந்த நுண்ணுயிரியின் உடலில் உள்ள வேதிப்பொருளான லுாசிபெரின், லுாசிபரேஸ் ஆகியவை ஆக்சிஜனோடு சேரும்போது, ஒளி வெளியாகிறது.
அப்போது அந்தப் பகுதியின் அலை 'புளோரசன்ட் நீல' நிறத்தில் ஜொலிக்கும். இந்த நிகழ்வை, பயோலுமினெசென்ஸ் என அழைக்கப்படுகிறது' என்றார்.