/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
/
புதுச்சேரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ADDED : ஜன 17, 2026 05:35 AM

புதுச்சேரி: தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரியில் அதிக அளவில் குவிந்தனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம், புதுச்சேரியில் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் புதுச்சேரிக்கு வந்துள்ளனர்.
இதனால், நகரப்பகுதியில் உள்ள கெஸ்ட் ஹவுஸ், ஓட்டல் ரூம்கள் அனைத்தும் நிரம்பி வழிந்தது.
மேலும், முக்கிய சுற்றுலா பகுதிகளான கடற்கரை சாலை, பாண்டி மெரினா, சுண்ணாம்பாறு போட் ஹவுஸ், மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், இருதய ஆண்டவர் ஆலயம் போன்ற இடங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
குறிப்பாக, நேரு வீதி, காந்தி வீதிகளில் உள்ள சாலையோர கடைகளில் துணிகள் வாங்க பொதுமக்கள் திரண்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.

