ADDED : பிப் 01, 2024 05:00 AM

பாகூர்: பாகூர் கஸ்துாரிபாய் காந்தி அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில், போக்குவரத்து விழிப்புணர்வு முகாம் நடந்தது.
நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், நடந்த முகாமிற்கு, தமிழ் விரிவுரையாளர் சிவகாமி வரவேற்றார். பள்ளி துணை முதல்வர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் வாணி முன்னிலை வகித்தார். நல்லாசிரியர் வெற்றிவேல் நோக்கவுரையாற்றினார்.
சிறப்பு அழைப்பாளராக புதுச்சேரி போக்குவரத்து துறை சார்பில் புதுமை பாலக்கிருஷ்ணன் கலந்து கொண்டு, மாணவர்கள் பஸ் படியில் பயணம் செய்தால் ஏற்படும் உடல் உறுப்புகள் பாதிப்பு மற்றும் உயிர் இழப்புகள் மற்றும் சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து விளக்கினார்.
நிகழ்ச்சியையொட்டி , போக்குவரத்து விதிகள் குறித்து வினாடி வினா நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் மணிகண்டன் நன்றி கூறினார்.