/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முக்கிய சிக்னல்களில் வாகன தணிக்கை போக்குவரத்து துறை அதிகாரிகள் அதிரடி
/
முக்கிய சிக்னல்களில் வாகன தணிக்கை போக்குவரத்து துறை அதிகாரிகள் அதிரடி
முக்கிய சிக்னல்களில் வாகன தணிக்கை போக்குவரத்து துறை அதிகாரிகள் அதிரடி
முக்கிய சிக்னல்களில் வாகன தணிக்கை போக்குவரத்து துறை அதிகாரிகள் அதிரடி
ADDED : டிச 14, 2025 05:32 AM

புதுச்சேரி: முக்கிய சிக்னல்களில் இரவு நேரங்களில் போக்குவரத்த துறை அதிகாரிகள் அதிரடியாக வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி போக்குவரத்து ஆணையர் சிவக்குமார், வட்டாரப் போக்குவரத்து அலுவலக தலைமை அலுவலர் பிரபாகர ராவ் ஆகியோர் உத்தரவின்பேரில், இந்திரா சிக்கனல், ராஜிவ் சிக்னல் ஆகிய இடங்களில் அமலாக்கச் சோதனை நடந்தது.
இந்த சோதனை வட்டார போக்குவரத்து அலுவலர்கள்ரமேஷ், அங்காளன் ஆகியோர் தலைமையில் இரண்டு குழுக்களாக பிரிந்து நடத்தப்பட்டது.இந்தச் சோதனையின்போது, பெர்மிட், காப்பீடு இல்லாதது பல்வேறு விதிமுறைகளை மீறிய9 சரக்கு வாகனங்கள், 2 ஸ்டேஜ் கேரேஸ் பஸ்கள், 2 பைக்குள், 3 கார்கள், 2 ஆம்னி பஸ்களுக்கு உள்ளிட்ட18 வாகனங்களுக்கு அபராதம் விதித்து இ-சலான்கள் வழங்கப்பட்டன. இந்த அபராத தொகையை நேரில் அல்லது ஆன்லைனில் கட்ட அறிவுறுத்தப்பட்டது.
மேலும், பெர்மிட் இல்லாமல் இயக்கப்பட்ட 1 ஆம்னி பஸ், 2 கனரக சரக்கு வாகனங்களுக்குசெக் ரிப்போர்ட் எனும் சோதனை வழங்கி பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த வாகன ஓட்டிகள்நேரில், அபராத தொகை கட்ட அறிவுறுத்தப்பட்டது.இதேபோல் குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய நபர், சட்ட நடவடிக்கைகளுக்காக காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். அவருடைய வாகனத்திற்கும் செக் ரிப்போர்ட் வழங்கி, பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், ஆவணங்கள் காட்ட 2 கனரக சரக்கு வாகனங்கள், 1 கார், 1 பைக் என,4 வாகனங்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.
போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் கூறுகையில்,'சாலைப் பாதுகாப்பை உறுதிப் படுத்தவும், மோட்டார் வாகனச் சட்டத்தை கடுமையாகக் கடைப்பிடிக்கவும் இது போன்ற சிறப்பு அமலாக்கச் சோதனைகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

