/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குழந்தை பிறந்து 5 நாளில் இறந்த சோகம்
/
குழந்தை பிறந்து 5 நாளில் இறந்த சோகம்
ADDED : ஆக 07, 2025 02:54 AM
புதுச்சேரி: மூலக்குளத்தில் பிறந்து 5 நாட்களே ஆன பெண் குழந்தை திடீரென இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மூலக்குளம், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார், 29; இவரது மனைவி கீர்த்தனா. திருமணமாகி ஓராண்டு ஆகிறது. இந்நிலையில், கீர்த்தனாவிற்கு கடந்த 31ம் தேதி கவுண்டன்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. கடந்த 3ம் தேதி தாயும், குழந்தையும் வீடு திரும்பினர்.
இந்நிலையில், நேற்று காலை 5:00 மணிக்கு, கீர்த்தனா தனது குழந்தைக்கு பவுடர் பால் கொடுத்து, துாங்க வைத்துள்ளார். பின், சிறிது நேரம் கழித்து குழந்தையை பார்த்தபோது, எந்தவித அசைவும் இன்றி இருந்துள்ளது.
இதனால், அச்சமடைந்த பெற்றோர் குழந்தையை கதிர்காமம் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து ராஜ்குமார் அளித்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.