/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரயில் மோதி பஸ் டிரைவர் பலி வில்லியனுாரில் பரிதாபம்
/
ரயில் மோதி பஸ் டிரைவர் பலி வில்லியனுாரில் பரிதாபம்
ரயில் மோதி பஸ் டிரைவர் பலி வில்லியனுாரில் பரிதாபம்
ரயில் மோதி பஸ் டிரைவர் பலி வில்லியனுாரில் பரிதாபம்
ADDED : அக் 08, 2024 02:58 AM
புதுச்சேரி: வில்லியனுார் அருகே ரயில் மோதி பஸ் டிரைவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
வில்லியனுார் அடுத்த ஜி.என்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வம், 57; பஸ் டிரைவர். இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இவரது மனைவி, வி.தட்டாஞ்சாவடி மெயின் ரோட்டில் மாலை நேர டிபன் கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், செல்வம் நேற்றிரவு மனைவி நடத்தி வரும் டிபன் கடைக்கு சென்று, அவருக்கு உதவியாக இருந்துள்ளார்.
பின்னர், அங்கிருந்து ஜி.என்.பாளையத்தில் உள்ள தனது வீட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
இதற்காக, வி.தட்டாஞ்சாவடி- ஜி.என்.பாளையம் குறுக்கே உள்ள ரயில் பாதையை செல்வம் கடக்க முயன்றார். அப்போது, விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற விரைவு ரயில், செல்வம் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த செல்வம் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்த வில்லியனுார் சப் இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார் சம்பவத்திற்கு சென்று, செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.