ADDED : மார் 13, 2024 12:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி, : லாஸ்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் முன் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான கற்றல், கற்பித்தல் பயிற்சி முகாம் நடந்தது.
முகாமிற்கு நிறுவனத்தின் முதல்வர் சுகுணா சுகிர்த பாய் தலைமை தாங்கினார். இதில், முதன்மை கல்வி அலுவலர் தனச்செல்வம் நேரு, துணை இயக்குனர்(பெண் கல்வி) சிவராம ரெட்டி, துணை இயக்குனர்(தொடக்கக்கல்வி) முனுசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் மாநில பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் செய்திருந்தனர்.

