/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாரம்பரிய நெல் சாகுபடி குறித்த பயிற்சி முகாம்
/
பாரம்பரிய நெல் சாகுபடி குறித்த பயிற்சி முகாம்
ADDED : டிச 31, 2025 04:59 AM

வில்லியனுார்: தொண்டமாநத்தம் கிராமத்தில் பாரம்பரிய நெல் வகைகள் உற்பத்தி மற்றும் திறனை மேம்படுத்துவது குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, ஆத்மா திட்டத்தின் கீழ், பண்ணை தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில், நடந்த முகாமிற்கு வில்லியனுார் கோட்ட துணை வேளாண் இயக்குனர் ராஜ்குமார் தலைமை தாங்கினார்.
வேளாண் அலுவலர் சங்கரதாஸ் வரவேற்றார். காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய முன்னாள் தலைவர் விஜயகுமார் பூச்சி மற்றும் நோய்களை இயற்கை வழியில் கட்டுப்படுத்துவது குறித்தும், விவசாயி வீரப்பன் பாரம்பரிய நெல் சந்தை படுத்துதல் குறித்தும், விவசாயி கலாநிதி, இயற்கை வழியில் நெல் சாகுபடி குறித்தும், மண்வள அட்டையின் முக்கியத்துவம் குறித்து வேளாண் அலுவலர் ஜோதிகணேசன் ஆகியோர் விளக்கினர்.
மணக்குள விநாயகர் வேளாண் கல்லுாரி மாணவிகள் மோனிஷா, மேகலா, மித்ரா, மாடகோபி சந்திராமகாலட்சுமி, பார்கவி, நந்தினி, ேஹமதுர்கா, லாவண்யா, கிர்த்திகா, லோகேஷ்வரி ஆகியோர் மண் மாதிரி எடுக்கும் செயல் விளக்கம் அளித்தனர். தொண்டமாநத்தம், ராமநாதபுரம், பிள்ளையார்குப்பம், கூடப்பாக்கம், துத்திப்பட்டு விவசாயிகள் பங்கேற்றனர்.
ஆத்மா திட்ட மேலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

