தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி


ADDED : செப் 21, 2026 10:45 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 21, 2026 10:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட தற்செயல் கலப்பு முறை மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல்  இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பின்படி வரும் 6 ம் தேதி நடக்கிறது. இதனைமுன்னிட்டு, ஓட்டுப்பதிவு நாளன்று பணியில் ஈடுபடுத்தப்படவுள்ள வாக்குச்சாவடி அலுவலர்கள் தற்செயல் கலப்பு முறையில் கடந்த 16ம் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் கடந்த 19 ம் தேதி கதிர்காமம் இந்திரா காந்தி மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன மையத்தில் நடந்தது.

இப்பயிற்சி வகுப்பில், வாக்குச்சாவடி அலுவலர்கள்  ஓட்டுப்பதிவு நாளன்று கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள், வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வி.வி.பாட்., இயந்திரங்களை கையாளும் முறை பற்றிய செயல்முறை விளக்கங்கள்  குறித்து பயிற்சி அளிக்கப்படடது.

அதன் ஒரு பகுதியாக நேற்று 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் ஓட்டு சேகரிக்கும் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புகள் தொழிலாளர் துறை கலந்தாய்வுக் கூடத்தில் நடந்தது.

தொடர்ந்து ஒட்டுப்பதிவு நாளன்று வாக்குச்சாவடியில் ஈடுபடுத்தப்படவுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட தற்செயல் கலப்பு முறை மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள பொது பார்வையாளர் சுவர்ண பாண்டா தாஸ் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us