/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வெட்டிவேரில் பொருட்கள் தயாரிப்பு: மகளிர் சுய உதவி குழுவினருக்கு பயிற்சி
/
வெட்டிவேரில் பொருட்கள் தயாரிப்பு: மகளிர் சுய உதவி குழுவினருக்கு பயிற்சி
வெட்டிவேரில் பொருட்கள் தயாரிப்பு: மகளிர் சுய உதவி குழுவினருக்கு பயிற்சி
வெட்டிவேரில் பொருட்கள் தயாரிப்பு: மகளிர் சுய உதவி குழுவினருக்கு பயிற்சி
ADDED : அக் 27, 2025 11:45 PM

பாகூர்: மத்திய அரசின் நிதி உதவியின் கீழ், புதுச்சேரி மாசுக்கட்டுப்பாடு குழுமத்தின், சுற்றுச்சூழல் தகவல், விழிப்புணர்வு திறன் மேம்பாடு மற்றும் வாழ்வாதார திட்டத்தின் கீழ், வெட்டிவேரில் இருந்து நிலையான தயாரிப்புகளை உருவாக்குதல் என்ற தலைப்பில், மகளிர் சுய உதவி குழுவினருக்கான, 15 நாட்கள் திறன் மேம்பாட்டு திட்டத்தின், சான்றிதழ் பயிற்சி முகாம் பாகூர் களஞ்சியம் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
விழாவில், அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் சுற்றுச்சூழல் பொறியாளர், திட்ட ஒருங்கிணைப்பாளர் காளமேகம் வரவேற்றார். புதுச்சேரி மாசுக்கட்டுப்பாடு குழுமத்தின் உறுப்பினர் செயலர் ரமேஷ் நோக்கவுரையாற்றினார். சிறப்பு விருந்தினராக செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பயிற்சி முகாமினை துவக்கி வைத்தார். வெட்டி வேர் பொருட்கள் பயிற்சியாளர் இயற்கை சுற்றுச்சூழல் தயாரிப்பு நிறுவனர் ஆனந்தன், மூத்த ஆலோசகர் கீதா, புதுச்சேரி ஸ்வர்ணிம் ஸ்ரீ அரவிந்தோ சொசைட்டி திட்ட ஒருங்கிணைப்பாளர் வினோத்குமார் பயிற்சி குறித்து பேசினர்.
திறன் மேம்பாடு மற்றும் வாழ்வாதார திட்ட அலுவலர் நித்தியா நன்றி கூறினார். வரும் 14ம் தேதி வரை நடைபெறும் இம்முகாமில், வெட்டிவேரில் பாய், மாலை, யோகா மேட் உள்ளிட்ட பொருட்கள் செய்வது குறித்து மகளிர் சுய உதவி குழுவினருக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

