ADDED : ஏப் 14, 2026 06:56 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து இயக்கப்படும் ரயில், பராமரிப்பு காரணமாக 4 நாட்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே திருச்சி மண்டல கோட்டத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
புதுச்சேரியில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் ரயில் எண் - 66052 புதுச்சேரி, சென்னை எக்மோர் மெமு ரயில் சேவை வரும் 15, 18, 22, 25 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் அன்றைய தினத்தில் விழுப்புரம் சந்திப்பில் இருந்து இயக்கப்படுகிறது.
அதேபோல் அன்றைய தினங்களில் திருப்பதியில் அதிகாலை 4:10 மணிக்கு புறப்படும் ரயில் எண் - 16111 திருப்பதி - புதுச்சேரி மெமு எக்ஸ்பிரஸ் ரயில் புதுச்சேரிக்கு வராமல் விழுப்புரம் சந்திப்பு வரை இயக்கப்படும். வழித் தடங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
