/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அடையாளம் தெரியாத முதியவருக்கு சிகிச்சை
/
அடையாளம் தெரியாத முதியவருக்கு சிகிச்சை
ADDED : ஜன 31, 2026 07:11 AM

புதுச்சேரி: புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அடையாளம் தெரியாத முதியவர் பற்றி தகவல் கோரப்பட்டுள்ளது.
இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில், 68 வயது சாமிதுரை என்ற முதியவர் கடந்த 25ம் தேதி பலத்த காயங்களுடன் மயங்கிய நிலையில், அவசர அறுவை சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகி றார்.
இவருடைய விலாசம் நம் பர் -74, விவேகானந்தர் நகர், பெரியாகுறிச்சி, அரியலுார் மாவட்டம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட நபரை பற்றி தகவல் தெரிந்தவர்கள் மருத்துவமனை உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஆத்மநாதன் (94880-74492) அல்லது மக்கள் குறைதீர் அதிகாரி ரவி (93634-5115) என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும்.

