/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்று நடும் விழா
/
நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்று நடும் விழா
ADDED : ஏப் 26, 2025 04:24 AM

புதுச்சேரி : புதுச்சேரி சட்டப்பணி கள் ஆணையம் மற்றும் வனத்துறை சார்பில் கோர்ட் வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
சென்னை உயர்நீதிமன்றம் வழிகாட்டுதலின்படி நடந்த விழாவிற்கு, மாநில சட்டப் பணிகள் ஆணைய தலைவரான புதுச்சேரி தலைமை நீதிபதி ஆனந்து, மரக்கன்றுகளை நட்டு பணியை துவக்கி வைத்தார்.
நீதிபதிகள் சுமதி, பால முருகன், ஜெயசுதா, சட்டப் பணிகள் ஆணைய செயலாளர் கிரிஸ்டியான், முதன்மை குற்றவியல் நீதிபதி சிவக்குமார் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், வழக்கறிஞர் சங்கத் தலைவர் ரமேஷ், செயலாளர் நாராயணக்குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
விழாவில், ஒவ்வொரு மரக்கன்றுகளை பராமரிக்க தனித்தனியே நீதிமன்ற ஊழியர்கள் நியமித்து, ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டது.

