ADDED : ஜூலை 22, 2025 01:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : கோட்டகுப்பம் அடுத்த நடுக்குப்பம் கடற்கரையோரம் ரோட்டரி கிளப் ஆப் லெகசி பாண்டிச்சேரி, கலாம் பசுமை பாதுகாப்பு இயக்கம் மற்றும் பைக் பழுது நீக்குவோர் சங்கம் சார்பில், மரக்கன்று நடும் விழா நடந்தது.
சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கீர்த்தி, நடுக்குப்பம் கவுன்சிலர் மூர்த்தி ஆகியோர் பங்கேற்று, மரக்கன்றுகள் நடும் பணியினை துவக்கி வைத்தார். தொடர்ந்து, கிராமம் முழுதும் மரக்கன்றுகள் நடப்பட்டன.
இதில், ரோட்டரி கிளப் ஆப் லெகசி பாண்டிச்சேரியின் தலைவர் பழனி, செயலாளர் ரகுவரன், மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி என்.எஸ்.எஸ்., அலுவலர் அபிநயா உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி மாணவ, மாணவிகள் கடற்கரை பகுதியை துாய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

