ADDED : ஜூலை 27, 2025 07:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர் : பாகூர் பாரதி அரசு மேல்நிலைப்பள்ளியில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, மரக்கன்று நடும் விழா நடந்தது.
திட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணசாமி வரவேற்றார். பள்ளி துணை முதல்வர் சுதா தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் அமலி முன்னிலை வகித்தார். மூத்த விரிவுரையாளர் தனுஷ் நோக்கவுரையாற்றினார்.
மத்திய அரசின் 'தாயின் பெயரில் ஒரு மரம்' என்ற இயக்கம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் மரகன்றுகள் நடப்பட்டது. விழாவில், ஆசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். கணித பட்டதாரி ஆசிரியர் சுதா நன்றி கூறினார்.