தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கும் விழா

 மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கும் விழா

 மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கும் விழா


ADDED : பிப் 03, 2026 04:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 03, 2026 04:44 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கனுார்: காட்டேரிக்குப்பம் இந்திரா காந்தி அரசு உயர்நிலைப் பள்ளியில், இளைஞர் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம், லோட்டஸ் பவுண்டேஷன் அமைப்பு சார்பில் மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கும் விழா நடந்தது.

தமிழ் ஆசிரியர் கலைவாணி வரவேற்றார். தலைமை ஆசிரியர் அரிகோவிந்தன் தலைமை தாங்கினார். தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மீனா முன்னிலை வகித்தார். ஆங்கில ஆசிரியர் கலைவாணி தொகுத்து வழங்கினார்.

தனியார் நிறுவன மனித வளத்துறை தலைவர் விக்னேஷ் குமார் கலந்து கொண்டு மரக்கன்றுகளை வழங்கி, அவற்றின் சிறப்புகளை மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார். லோட்டஸ் பவுண்டேஷன் இயக்குனர் சமயவேலு தேசிய மற்றும் மாநில அளவில் சிலம்பம் மற்றும் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.

மேலும், லோட்டஸ் பவுண்டேஷன் அமைப்பு மூலம் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்பிற்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது. உடற்கல்வி ஆசிரியர் பாலசங்கர் நன்றி கூறினார்.

ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ருக்குமணி, உதய பானு, சுஜோ மலர், கீதாஞ்சலி, மெர்லின் சுகுணா, சிவசங்கரி, வெங்கடேசன் மற்றும் அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us