ADDED : ஆக 16, 2026 05:30 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: அய்யங்குட்டிப்பாளையத்தில், சாலையின் நடுவே மரம் சாய்ந்து விழுந்ததால் பரபரப்பு நிலவியது.
அய்யங்குட்டிப்பாளையம், கல்மேடுபேட் சாலை சந்திப்பில், நேற்று காலை 10:30 மணிக்கு பழமையான புன்னை மரம் திடீரென சாலையின் நடுவில் சாய்ந்தது. இதனால், அங்கு போக்குவரத்து பாதித்தது. தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கோரிமேடு தீயணைப்பு நிலைய அதிகாரி கார்த்திகேயன் தலைமையிலான நாகராஜ் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் மரத்தை அப்புறப்படுத்தினர். இதனால், அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது. மரம் விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
