/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பஹல்காம் தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி
/
பஹல்காம் தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி
ADDED : ஏப் 29, 2025 04:22 AM

புதுச்சேரி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு சஹாயோஜினி என்ற பெண்கள் குழு சார்பில் அமைதி ஊர்வலம் பாலாஜி தியேட்டரில் இருந்து சென்று, ராஜா சிக்னல் அருகில் மெழுகுவர்த்தி ஏந்தி   அஞ்சலி செலுத்தினர். இந்த அஞ்சலியில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.
நிகழ்ச்சியில்,  குழு நிர்வாகிகள் மது, ராஜ்ஸ்ரீ, அகன்ஷா, ஆர்த்தி, இந்து, பயல், ஊர்மிளா, கவிதா, குஞ்சன், நிலம், பமிதா, நந்திதா, ஆர்த்தி, சந்தியா தி.மு.க. மகளிர் அணி காயத்ரி, சாந்திராகாலா, சித்ரா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

