/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோவிந்தா நாமத்துடன் பக்தியை குழந்தைகளுக்கு சொல்லி கொடுப்போம் திருச்சி கல்யாணராமன் உபன்யாசம்
/
கோவிந்தா நாமத்துடன் பக்தியை குழந்தைகளுக்கு சொல்லி கொடுப்போம் திருச்சி கல்யாணராமன் உபன்யாசம்
கோவிந்தா நாமத்துடன் பக்தியை குழந்தைகளுக்கு சொல்லி கொடுப்போம் திருச்சி கல்யாணராமன் உபன்யாசம்
கோவிந்தா நாமத்துடன் பக்தியை குழந்தைகளுக்கு சொல்லி கொடுப்போம் திருச்சி கல்யாணராமன் உபன்யாசம்
ADDED : மார் 16, 2024 06:09 AM

புதுச்சேரி: கோவிந்தா நாமத்துடன் பக்தியை குழந்தைகளுக்கு சொல்லி கொடுப்போம் என திருச்சி கல்யாணராமன் உபன்யாசம் செய்தார்.
பாரதப் பண்பாட்டு அமைப்பான வேத பாரதி சார்பில் புதுச்சேரி காந்தி வீதி வரதராஜப் பெருமாள் கோவிலில் 15ம் தேதி முதல் 17 ம்தேதி வரை திருச்சி கல்யாணராமனின் உபன்யாசம் நடக்கிறது. முதல் நாளான நேற்று 'திரவுபதி மானம் காத்தல்' என்ற தலைப்பில் அவர் உபன்யாசம் செய்தார்.
இதில் அவர் பாண்டவர்கள் 5 பேர்.நல்லவர்களாக வாழ்த்தனர்.துரியோதனர்கள் 100 பேர் அதர்ம பாதையில் வாழ்ந்தனர். அந்த காலத்திலேயே தர்மத்திற்கும்-அதர்மத்திற்கு இடையே போராட்டம் நடந்தது.இதில் 5 பேர் நல்லவர்கள்.100 பேர் பொல்லாதவர்கள்.
தர்மபுத்திரன் சூதாடினான் எல்லாவற்றையும் இழந்தான்.திரவுபதியையும் பந்தியத்தில் இழந்தான்.திரவுபதி கோடீஸ்வரன் மகள். ஆனால் யாரும் திரவுபதியை காக்க வரவில்லை. கோவிந்தா, கோவிந்தா என்று திரவுபதி மனம் உருகி கதறினாள். கோவிந்த நாமம் தான் புடவையை கொடுத்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
இந்த காலத்தில் இருக்கும் அடியார்கள்,பணம் சம்பாதிப்பது தான் தம்மை காக்கும் என்று நினைக்கின்றனர்.ஆனால் பணத்தை கொடுப்பதும் கோவிந்தன் தான் என்பதை மறந்து விடுகின்றனர். நாமம் தான் காக்கும் என்பதை நிருப்பித்தவள் திரவுபதி.அதனால் நாமும், கோவிந்தா நாமத்துடன் பக்தியை குழந்தைகளுக்கு சொல்லி கொடுப்போம்.சனாதன தர்மம் வளர்ப்போம்.
இவ்வாறு அவர் உபன்யாசம் செய்தார்.
இரண்டாம் நாளான இன்று 17 ம்தேதி நள சரித்திரம் என்ற தலைப்பிலும்,நாளை 17 ம்தேதி குலேசனும் கண்ணனும் என்ற தலைப்பிலும் உபன்யாசம் நடக்கின்றது.மாலை 6.30 மணியளவில் உபன்யாசத்தில் பங்கேற்கலாம்.
இதேபோல் கோவில்களில் உஞ்ச விருத்திக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. லாஸ்பேட்டை ராஜாஜி நகர் ராஜகணபதி கோவிலில் இன்று 16 ம்தேதி காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை உஞ்ச விருத்தியும்,நாளை 17 ம் தேதி குருமாம்பட்டு புத்துமாரியம்மன் கோவிலில் காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை நடக்கின்றது.

