தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆசிரியர்களுக்கு ஆதரவாக போராட்டம் அரசுக்கு த.வெ.க., எச்சரிக்கை

 ஆசிரியர்களுக்கு ஆதரவாக போராட்டம் அரசுக்கு த.வெ.க., எச்சரிக்கை

 ஆசிரியர்களுக்கு ஆதரவாக போராட்டம் அரசுக்கு த.வெ.க., எச்சரிக்கை


ADDED : ஜன 30, 2026 05:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 30, 2026 05:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தொடர் போராட்டம் நடத்தி வரும் ஒப்பந்த ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என, த.வெ.க.,வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., சாமிநாதன் வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை:

புதுச்சேரியில் ஒப்பந்த ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற சில நாட்களில் உள்ள நிலையில் அரசு பள்ளியில் படிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மன உளைச்சல் மற்றும் மதிப்பெண் குறைய அரசே காரணமாகிவிடும்.

ஆறு ஆண்டுகள் தொடர்ந்து பல்வேறு பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அரசு தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. அரசு அவர்களை முறைப்படி தேர்வு செய்து, சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.

அவர்களுக்கு வயது அடிப்படையில் முன்னுரிமை கொடுத்து, நிரந்தர வேலை வழங்க அரசு தவறிவிட்டது. ஜனநாயக முறையில் போராடி வரும் அரசு பள்ளி ஆசிரியர்களை வேலை நீக்கம் செய்வதாக மிரட்டுவது ஜனநாயக படுகொ லை. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நலனை கருதி, உடனடியாக ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றி, ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ஆலோசனைப்படி, புதுச்சேரி மாநில தமிழக வெற்றி கழகத்தின் சார் பில் சட்டசபை முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us